ஒரே ஜில் ஜில் ஜிகா ஜிகாதான்.. அடிக்குது குளிரு.. ஊட்டியை நனைக்கும் பனி.. நடுங்கும் மக்கள்!
நீலகிரி மாவட்டத்தில் மக்களை பனிப்பொழிவுடன் குளிர் வாட்டி வருகிறது.
Recommended Video

ஊட்டி: ஊட்டி முழுவதுமே ஒரே ஜில் ஜில் ஜிகாஜிகாதான்.. பொழிந்து வரும் பனியை கண்டு நடுங்கி வருகிறார்கள் பொதுமக்கள்!
கடந்த ஒரு மாதமாகவே ஊட்டியில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. காலையில் 8 மணி ஆனால் கூட வெளியில் யாரும் வருவதில்லை.
அப்படியே வெளியே வந்தாலும் எதிரே வரும் வண்டிகள் கூட கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனி கொட்டி வருகிறது. காலையில் ஆரம்பித்து இரவு வரை நாளெல்லாம் வண்டிகளில் லைட் போட்டு கொண்டு போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலைகள், செடிகள்
கருப்பு நிற தார் ரோடுகள் முழுவதும் வெண்பனியால் நிறைந்து கிடக்கிறது. பசுமை இலைகளும், செடிகளும்கூட கருகி காய்ந்து போய் உள்ளன. இப்படிதான் வேலூர் மாவட்டத்திலும் பனிப்பொழிவு இருக்கிறது. மாலை 5 மணிக்கு மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. அதேபோல, மாலை 5 மணிக்கு பனிப்பொழிவு இன்னும் அதிகமாகி விடுகிறது.

குளிர் காய்கிறார்கள்
முடங்கி கிடக்கும் பொதுமக்கள் சூரியன் எப்போ வரும் காத்திருந்த பிறகே காலையில் வெளியே வருகிறார்கள். பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேலூர் மக்கள் நடுரோடுகள், நடுத்தெருக்கள், மற்றும் தங்கள் வீட்டுக்கு முன்னாடியே பழைய பொருட்களை கொளுத்திவிட்டு குளிர் காய்கிறார்கள்.

கண்ணாடி போல நீர்
கொடைக்கானல் முழுவதுமே மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வருகிறார்கள் என்றால் அங்குள்ள ஏரிகளில் உறைந்து கிடக்கும் தண்ணீரும் இயல்பு நிலைக்கு வரவில்லை. அப்படியே ஆடாமல் அசையாமல் கண்ணாடி போல உறைந்து உள்ளது.

சென்னைவாசிகள்
இதை தவிர மதுரை, சென்னை போன்ற அனல் கொளுத்தும் மாவட்டங்களிலும் மக்கள் குளிரை அனுபவித்து வருகிறார்கள். சாயங்காலம் ஆனாலே ஸ்வெட்டர்களை போட்டுக் கொள்ளும் நிலைமை சென்னைவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கால்நடைகள்
ஒட்டுமொத்தமாக, தமிழகம் முழுவதுமே ஜில்லென்ற குளிர் காற்று வீசி வருவதுடன், பனிப்பொழிவை சாரல்போல கொட்டி வருகிறது. மனிதர்களே கதி கலங்கி போகிறார்கள் என்றால், விலங்குகள், கால்நடைகளின் நிலைமையோ இன்னும் பரிதாபம்.

சந்தடி சாக்கு
மாநிலம் முழுவதும் பனிப்பொழிவு சிறு தூரல் போல கொட்டி வருவதால் ஸ்வெட்டர்கள், சால்வைகளின் விற்பனை சந்தடி சாக்கில் சூடு பிடித்து வருவதுடன், குளிருக்கு டீக்கடைக்கடைகளை நோக்கி பெரும்பாலானோர் படையெடுத்து வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications