கொட்டி தீர்க்கும் கனமழை.. ஊட்டிக்கு போறீங்களா! இதை நோட் பண்ணிக்கோங்க

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இருப்பினும் போதுமான அளவுக்கு மழை பொழியவில்லை என்று வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் தெரிவித்திருக்கின்றன. இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கனமழை காரணமாக ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருக்கின்றன. எனவே, ஊட்டிக்கு சுற்றுலா செல்வதற்கு முன்னர் வானிலை நிலவரத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

Ooty rain weather

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

21ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

22ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

எனவே கனமழை எச்சரிக்கை காரணமாக ஊட்டியின் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருக்கின்றன. உதகையில் உள்ள அவலாஞ்சி, பைன் மரக்காடு, 8-வது மைல் டீ பார்க், மரவியல் பூங்கா ஆகிய சுற்றுலா மையங்கள் இன்று மூடப்பட்டிருக்கின்றன. நாளை விடுமுறையா என்பது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே ஊட்டிக்கு சுற்றுலா செல்வதற்கு முன்னர் மழை நிலவரம், விடுமுறை அறிவிப்பு உள்ளிட்டவை குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+