ஊட்டி பெண்ணின் கழுத்தில் 'முதல் முறையாக' நகையை பறித்த இளைஞர்.. கற்பனை செய்ய முடியாத ட்விஸ்ட்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ஊட்டி ரயில் நிலையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வேலை முடிந்து அந்த இளம் பெண் குட்செட் சாலை, ரயில் நிலைய சாலை வழியாக ஊட்டி காந்தல் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது கேரள வாலிபர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை பறித்தார்.. ஆனால் அவருக்கு பெரிய ட்விஸ்ட் காத்திருந்தது.
இன்றைக்கு தங்க நகை விலை மிக அதிகமாகி விட்டது. 65000 என்கிற அளவில் உயர்ந்துள்ளது. அதனால் தவறே செய்யாதவர்கள் கூட தங்கத்தை வழிபறி செய்து பணக்காரர் ஆகலாம் என்று தவறான முடிவெடுக்கிறார்கள். தங்க நகைகளை திருடி மாட்டுவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் மிக அதிகமாகி வருகிறது. இதேபோல் பலர் தங்க நகையை பறிகொடுப்பதும் அதிகரித்து வருகிறது. தங்க நகை வழிபறி என்பதை தாண்டி வீடுகளிலும் திருடுவது அதிகமாக இருக்கிறது. ஊட்டியில் தங்க நகை திருடியவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத ட்விஸ்ட் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ஊட்டி ரயில் நிலையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி மதியம் வேலை முடிந்து அவர் குட்செட் சாலை, ரயில் நிலைய சாலை வழியாக ஊட்டி காந்தல் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
அப்போது எதிரில் வந்த வாலிபர் ஒருவர் பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை பறித்துக்கொண்டு அப்பர் பஜார் சாலை வழியாக ஓடியிருக்கிறார். இதில் பெண்ணிடம் பறித்து சென்ற நகை கவரிங் என்று தெரிகிறது. தங்கம் என நினைத்து அந்த வாலிபர் பறித்து ஓடியிருக்கிறார்.
ஆனாலும் அந்த பெண் அங்கு கூச்சலிடவே, அந்த வழியாக வந்த பொதுமக்கள் அந்த வாலிபரை விரட்டிப்பிடித்து சரமாரியாக தாக்கி ஊட்டி மேற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 20 வயதாகும் அபின் ஷாகுல் என்பதும், முதல்முறையாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டபோது தங்கம் என நினைத்து கவரிங் நகையை பறித்து போலீசாரிடம் மாட்டியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. தடாலடியாகச் சரிந்த தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா? -
தங்கத்தை மொத்தமாக முடக்க புதிய பிளான்.. ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? -
மின் பற்றாக்குறை.. நீலகிரி டூ ஈரோடு .. சரியான நேரத்தில் பெரிய முடிவெடுத்த தமிழக அரசு -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications