என் மகனுக்கு எந்த பக்கத்தில் இருந்தும் அழுத்தம் வரவில்லை.. கொடநாடு தினேஷ் தந்தை பரபரப்பு பேட்டி
கொடநாடு தினேஷ் தற்கொலை வழக்கை மீண்டும் போலீஸ் விசாரிக்க போகிறது
ஊட்டி: எனது மகனுக்கு எந்த பக்கத்தில் இருந்தும் அழுத்தம் வரவில்லை என கொடநாடு எஸ்டேட்டில் கணிணி ஆப்ரேட்டராக பணிபுரிந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷ்குமார் தந்தை போஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி கொலை, கொள்ளை நடந்தது.
அப்போது அங்கிருந்த காவலாளியை கொன்று விட்டு 10 பேர் தப்பிசென்றுவிட்டனர்...இந்த சம்பவம் நடந்த அடுத்த சில தினங்களில் கொடநாடு பங்களாவின் சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குற்றவாளிகள்
இதையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை சம்பந்தமாக நீலகிரி மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இறுதியில், முக்கிய குற்றவாளியான சயன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்... இவர்களிடமும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில் சம்பவம் நடந்தபோது, கொடநாடு பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டிருந்தது பெருத்த சந்தேகத்தை ஏற்கனவே கிளப்பியிருந்தது..

தற்கொலை ஏன்?
இது தொடர்பான வழக்கு விசாரணையையும் போலீசார் அப்போது கையில்எடுத்தனர்.. இறுதியில் சோலூர் மட்டம் போலீஸார் தற்கொலை என வழக்குப்பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தனர். இந்நிலையில், தினேஷ் தற்கொலையில் பல்வேறு சந்தேகம் உள்ளதாகவும், அதை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் நீலகிரி மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது.. அதன்படி, கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபாவிடம் மறு விசாரணை நடத்த ஆகஸ்ட் 13ஆம் தேதி மனு அளித்தார்.

தனிப்படை
இதைத்தொடர்ந்து மறுவிசாரணை நடத்த அனுமதி வழங்கி நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டதன் பேரில், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் நீலகிரி மாவட்ட எஸ்பி ஆசிஸ் ராவத் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் 5 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை
இதில் குன்னூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் தினேஷ் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்... தினேஷின் தந்தை போஜன் மற்றும் தினேஷின் சகோதரியிடம் கோவையில் போலீசார் நடத்திய விசாரணையில் தினேஷின் தந்தை போஜன் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்.. சுமார் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல முக்கிய தகவல்களை போஜன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

மனஉளைச்சல்
அதில் "கொலை கொள்ளை சம்பவம் நடந்த ஏப்ரல் 24-ம் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு முதல் தினேஷ் தற்கொலை செய்துகொண்ட நாள்வரை அவன் வீட்டில் யாரிடமும் பேசவில்லை.. அம்மா, தங்கை, நண்பர்கள் என யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்துள்ளான்.. ஆனால், யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவன் தற்கொலை செய்து கொண்டான்" என்று போஜன் தெரிவித்துள்ளதாக கூறுகிறார்கள்.

மறுவிசாரணை
தினேஷ் தற்கொலை வழக்கை சந்தேக மரணம் என தனிப்படை போலீசார் வழக்கை மாற்றி அமைத்து இப்போது மறுவிசாரணையை தொடங்கி உள்ளநிலையில், இதுகுறித்து கோத்தகிரி தாசில்தார் இடமும் சோலூர் போலீசார் தற்கொலை வழக்கை சந்தேக மரணம் என மாற்றி விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது...

சம்பவம்
கொடநாடு எஸ்டேட்டில் தினேஷ் 7 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.. காலை 7 மணிக்கு வேலைக்கு செல்லும் அவர் இரவு 8 மணிக்குத்தான் வீடு திரும்புவாராம்.. கண்பார்வையில் கோளாறு இருந்ததால் சிகிச்சைக்காக அவர் கோவை சென்றிருந்தபோதுதான், கொடநாடு எஸ்டேட்டில் கொலையும் கொள்ளை சம்பவமும் நடந்திருக்கிறது...

வாக்குமூலம்
ஆனால், அந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பெற்றோர்களிடம் தினேஷ் சொன்னாராம்.. அப்படி சொல்லியும் சம்பவம் நடந்து அடுத்த சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள். சொந்தமாக ஒரு வீட்டை கட்டிவிட்டு திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் தினேஷின் ஒரே கனவாக இருந்ததாம்.. அதனால் லீவு கூட எடுக்காமல் வேலைக்கு சென்று வந்துள்ளார்..

மறுபோஸ்ட் மார்ட்டம்
எஸ்டேட்டில் கொலை கொள்ளை சம்பவம் நடந்தபிறகும்கூட, அதாவது தற்கொலை செய்வதற்கு முதல் நாள் வரைக்கும் கூட அவர் வேலைக்கு சென்று வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.
இப்போது தினேஷின் மரணத்தில் மறுவிசாரணை சூடு பிடித்திருப்பதால் பரபரப்பு கூடியுள்ளது.. விரைவில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, தேவைப்பட்டால் தினேஷ்குமாரின் உடலை மீண்டும் மறுபிரேத பரிசோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளார்களாம்.

விசாரணை
தினேஷ்குமார் அப்பா போஜன், அவரது மனைவி கண்ணகியிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.. இன்று தினேஷின் தங்கை ராதிகாவிடம் விசாரணை நடத்தினர்... விசாரணைக்கு பிறகு தினேஷின் தந்தை பேட்டியளித்தார்.. அதில் அவர் சொன்னதாவது: "தினேஷ் வீட்டில் தான் தற்கொலை செய்து கொண்டார்... அன்னைக்கு நான் பக்கத்து கிராமத்தில் சாவு ஒன்றுக்கு சென்றிருந்தேன்.

மருத்துவமனை
அப்போது மகன் மயக்கமுற்றிருப்பதாக தகவல் தெரிவித்தனர்... நான் அங்கிருந்து வருவதற்குள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டனர்.. அதை தான் போலீசாரிடம் தெரிவித்தேன் . நான் அன்று என்ன தெரிவித்தேனோ அதைதான் இன்றும் தெரிவித்தேன். யாரிடம் இருந்து அவருக்கு எந்த வித அழுத்தமும் இல்லை,, கொடநாடு எஸ்டேட்டிலிருந்தோ நண்பர்களிடமிருந்தோ எந்த வித அழுத்தம் தரப்படவில்லை..

கையெழுத்து
அவருக்கு என்ன மன உளைச்சல் என்று எனக்கு தெரியாது. எப்போதும் இருப்பதுபோல்தான் இருந்தான்,, ஏன் தற்கொலை செய்தார் என்று தெரியவில்லை.. போஸ்ட்மாட்டத்தில் உள்ளது உங்களது கையெழுத்தா என விசாரித்தனர்... நான் எழுதிக் கொடுத்தார்கள் கையெழுத்து போட்டேன் என்றேன்.. நேற்று என்னையும் என் மனைவியையும் விசாரணை செய்தனர்,, இன்று மகளை விசாரணை செய்தனர்.. மறுபடியும் தற்போது விசாரிப்பதால் யார் வந்து கேட்டாலும் இதைதான் சொல்லுவோம்" என்றார்.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க












Click it and Unblock the Notifications