தொலைத்தொடர்பு தகவல்களை ஆராய்ந்து வரும் சிபிசிஐடி.. கோடநாடு வழக்கில் விசாரணை தீவிரம்! கோர்ட்டில் பரபர
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது.
நீலகிரி : கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமடைந்து வருகிறது. இந்த விசாரணையில் தற்போது தொலைத்தொடர்பு தகவல்களை ஆராய்ந்து வருவதால் கால அவகாசம் வழங்கவேண்டும் என அரசு சார்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இன்று முக்கிய குற்றவாளிகள் என குற்றம்சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, அரசுத் தரப்பில் முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கோடநாடு கொலை கொள்ளை
ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது முக்கிய ஆவணங்களும், பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டன. மேலும், அப்போது பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய நபரான ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2017 ஏப்ரல் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

கார் டிரைவர் பலி
அதேபோல் மற்றொரு டிரைவரான சயான் சென்ற கார் கேரளாவில் விபத்துக்குள்ளானது. இதில் சயான் மனைவி, மகள் இறந்தனர். சயான் காயத்துடன் உயிர்தப்பினார். கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்படி கோடநாடு வழக்கோடு சம்பந்தப்பட்டவர்களில் அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு கொலை கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சிபிசிஐடி விசாரணை
மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. தனிப்படை போலீசார் 316 பேரிடம் நடத்திய விசாரணையில் பெற்ற வாக்குமூலம் மற்றும் 3,600 பக்க குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. செல்போன் உரையாடல் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து 5 பேரை சிபிசிஐடிஅடையாளம் கண்டறிந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

சயான், மனோஜ் ஆஜர்
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக குற்றம்சாட்டப்படும் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அரசு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும் ஆஜராகினர்.

தகவல் தொலைத்தொடர்பு விசாரணை
வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார்மேலும் சில சாட்சிகளிடம் விசாரணை நடத்தவுள்ள காரணத்தாலும், மின்னணு சார்ந்த தகவல் தொலைத்தொடர்புகள் குறித்து ஆராய்ந்து வருவதாலும் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட அமர்வு நீதிபதி முருகன், இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications