கோடநாடு கொலை.. கனகராஜ் மர்ம மரணம்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மகனுக்கு சிபிசிஐடி சம்மன்
நீலகிரி: கோடநாடு கொலை வழக்கு விசாரணைக்காக ஆஜராகுமாறு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. கனகராஜ் விபத்தில் மரணமடைந்தது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரியின் மகனிடம் வரும் 28ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கோடநாடு எஸ்டேட். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரைக்கும் இங்குதான் ஓய்வெடுக்க வருவார். ஜெயலலிதா மறைந்த பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், அந்த எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை போனது என்ன? எதற்காக கொள்ளை நடந்தது அதற்கான சூத்திரதாரி யார் என்பதில் பல மர்மங்கள் உள்ளன. இப்போது கோடநாடு பங்களா கொள்ளை தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்று அதிமுகவில் இருந்தே குரல்கள் எழுந்துள்ளன.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு 5 ஆண்டுகளாக உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான், கனகராஜ், சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையில் போலீசார் ஆஜராகினர். விசாரணை நடத்திய நீதிபதி ஸ்ரீதரன் வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து அரசு வக்கீல் ஷாஜகான் கூறுகையில், கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 189 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதுபற்றி நீதிமன்றத்தில் தெரிவித்தோம். இது சம்பந்தமாக ஆய்வுக்கு அனுப்பப்பட்ட சிடிக்கள், செல்போன்கள், தொலை தொடர்பு சாதனங்கள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்பட்டது. ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ள விவரங்களை விசாரணைக்காக கேட்டுள்ளோம். அதனை நீதிமன்றம் வழங்கினால், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளிகளிடம் விசாரணை என்ற பெயரில் யாரையும் கைது செய்யவில்லை. சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விசாரணை நடைபெற வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார் என்றும் கூறினார். இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கியபோது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் சிவகுமார் அவசர உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் , அடுத்த வாரம் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிவகுமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications