மசினகுடியில் மயக்க ஊசி செலுத்துவது ஈஸி, புலியை சுட்டு கொல்லாதீர்கள்: அதிகரிக்கும் எதிர்ப்பு குரல்கள்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சுற்றித்திரியும் புலியை சுட்டு பிடிக்க அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் வன உயிரினங்களுக்கு சொந்தமான இடத்தை மனிதர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு, இப்போது அந்த உயிரினங்களை சுட்டுக் கொல்லும் அளவிற்கு செல்வது மனிதத்தன்மையற்ற செயல் என்ற குரல்கள் வன ஆர்வலர்களால் எழுப்பப்படுகிறது.
Recommended Video
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த சில மாதங்களாக புலி ஒன்று சுற்றி வந்தது. அப்போது எதிர்ப்பட்ட குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இரண்டு ஆண்களை அந்த புலி அடித்துக் கொன்றது.
மனிதர்களை வேட்டையாடிய புலி அதன்பிறகு ஆட்கொல்லி புலியாக மாறிவிடும் என்பது இயற்கை. மனிதனின் உடலில் உள்ள உப்பு சுவை மாமிசம் புலிகளுக்கு பிடித்த உணவாக மாறிவிடும். அதேபோல பிற விலங்குகளை விரட்டிச் சென்று கொன்று புசிப்பதை விட, மனிதர்களை வேட்டையாடுவது புலிகளுக்கு எதிரான விஷயமாகவும் தெரியும். எனவே, இதன் பிறகு மனிதர்களைக் கொல்வது அதற்கு அத்தியாவசிய தேவையாக மாறி விடும் என்கிறார்கள் விலங்கியல் நிபுணர்கள்.

பொது மக்கள் சாலை மறியல்
இந்த நிலையில் மசினகுடி பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்துள்ளது அந்த புலி. அங்கு பழங்குடியினத்தைசேர்ந்த மாதவன் என்பவர் மாடுமேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது புலி அவரை அடித்துக் கொன்றுள்ளது. புலி நடமாட்டம் காரணமாக தினசரி கூலி வேலைக்கு கூட செல்ல முடியவில்லை இதனால் வருமானத்துக்கு வழி இல்லை என்று அங்குள்ள பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் . இந்தநிலையில்தான் புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை முடிவு செய்துள்ளது.

அதிரடிப்படை வருகை
புலியை சுட்டுக்கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நான்கு மனிதர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை இந்த புலி தாக்கி கொன்று உள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, வனத்துறை தெரிவிக்கிறது. ஆனால் புலிகளின் இயல்பு வேட்டையாடுவது. அதற்காக அதை கொல்ல வேண்டுமா என்ற கேள்வி எழுப்புகிறார்கள் வன ஆர்வலர்கள்.

மசினக்குடி சமதளப் பகுதி
இதுகுறித்து பெங்களூரை சேர்ந்த வனத்துறை ஆர்வலர் அமித் என்பவர் ஒன்இந்தியா தமிழிடம், பேசுகையில் தேவன் எஸ்டேட் பகுதி என்பது மலைப்பாங்கான பகுதி. அங்கே புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது கடினமான விஷயமாக இருந்திருக்கலாம். ஆனால் மசினகுடி பகுதி சமவெளி பகுதி. இங்கே புலியை குறிவைத்து மயக்க ஊசி மூலம் பிடிப்பது எளிதான விஷயம். ஆனால் அதை செய்யாமல் புலியை கொல்ல அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு இருப்பது வருத்தத்திற்குரிய செய்தி. முதுமலை, பந்திப்பூர் போன்றவை புலிகள் வாழ்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சரணாலயம். அதை ஒட்டியுள்ள பகுதிகளில் புலிகள் நடமாட்டம் இருப்பது இயல்பான விஷயம். பொதுமக்கள்தான் புலிகள், யானைகள் போன்ற வன விலங்குகள் வாழும் இடங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார்களே தவிர, அவை தங்கள் இருப்பிடத்தை விட்டு வேறு பகுதிக்கு செல்வது கிடையாது.

புலி இல்லையென்றால் வனம் இல்லை
புலிகள் அருகிவரும் உயிரினம். பல்லுயிர் பெருக்கத்துக்கு அதன் பங்களிப்பு மிக மிக முக்கியமானதாக இருக்கிறது. இயற்கை வளம் பெருக வேண்டுமென்றால் அங்கு புலிகள் இருக்க வேண்டும் என்பதுதான் நியதி. புலிகளை நாம் அழித்தால் அது இயற்கை சமநிலையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மழை பொழிவை குறைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே இரவு நேரத்தில் பந்திப்பூர் வழியாக வாகனங்களை இயக்குவதற்கு அனுமதி தரவேண்டும் என்று கேரளா வற்புறுத்திய போது அதற்கு எதிராக தீவிரமாக களமாடியவர்தான் இந்த அமித். கேரள அரசின் கோரிக்கையை கர்நாடகா புறக்கணித்தது நினைவில் இருக்கலாம்.

மயக்க ஊசி போடுங்கள்
தமிழகத்தைச் சேர்ந்த வன ஆர்வலர் ஒருவர் கூறுகையில், புலியை சுட்டு பிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருப்பதன் மூலம் அதை நிறைவேற்ற வேண்டுமென்றுதான் களத்தில் உள்ள வீரர்கள் கருதுவார்கள். அப்படி சுட வேண்டும் என்றால் குண்டுக்கு பதிலாக மயக்க மருந்து செலுத்தி சுட்டு அந்த புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிடவேண்டும். குண்டுகளால் அந்த அப்பாவி உயிரினத்தை துளைத்து எடுத்து விடக்கூடாது, என்று எச்சரிக்கை கலந்த ஆதங்க குரலில் தெரிவிக்கிறார்.

மக்கள் கோரிக்கை
சமூக வலைத்தளங்களிலும் முதல்வர் முக ஸ்டாலினுக்கு இது தொடர்பாக பல்வேறு ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்புவதை பார்க்க முடிகிறது. மயக்க ஊசி போட்டு புலியை பிடியுங்கள் சுட்டுக் கொல்லாதீர்கள், என்பது முதல்வருக்கு அவர்கள் விடுக்கும் கோரிக்கையாக இருக்கிறது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications