ஊட்டிக்கு போறீங்களா? நீலகிரியில் அதே இ-பாஸ் நடைமுறை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி.. கலெக்டர் சொல்வதென்ன?
ஊட்டி: நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.. இதுகுறித்து கலெக்டர் தெரிவித்திருக்கும் அறிவுறுத்தல், சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெற்று வருகிறது.
நீலகிரியை பொறுத்தவரை, வருடா வருடம் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள்.

ஆனால், இப்படி ஒரே நேரத்தில், நிறைய சுற்றுலாப் பயணிகள் வருவதால், மாவட்டத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது... அதுவும் இல்லாமல், தங்குமிடம், கழிப்பறை போன்ற அடிப்படை விஷயங்கள் சுற்றுலா பயணிகளுக்கு சரியாக கிடைப்பதில்லை..
அதிருப்திகள் : அதனால், எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்க முடியாமல், அதிருப்திக்கும், ஏமாற்றத்துக்கும் ஆளாகிவிடுகிறார்கள்.. இதனால், உள்ளூர் மக்களும் சரியான நேரத்தில் வேலைக்கு போக முடிவதில்லை.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், சென்னை ஹைகோர்ட் நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் வருகையில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக முதல்கட்டமாக இ-பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது... கடந்த மே மாதம் 7-ந்தேதி முதல் நீலகிரிக்குள் வரும் வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, இதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டிருந்தன.
மறுஅறிவிப்பு: கடந்த செப்டம்பர் 30-ந்தேதிவரை இ-பாஸ் எடுத்து வர கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இப்போது மறுஅறிவிப்பு வரும்வரை நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை தொடர ஹைகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபவ்யா தண்ணீரு சொல்லும்போது, உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மறுஅறிவிப்பு வரும்வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என்றும், இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து கடந்த 5 மாதங்களில் மட்டும் 2 3/4 லட்சம் வாகனங்களில் 13 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்திருப்பதாகவும் கூறினார்.. அத்துடன், முக்கிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
அவகாசம் நீட்டிப்பு: அதில், அவர் சொல்லும்போது, "சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி நீலகிரி மாவட்டத்துக்கு பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகள் கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல் இ-பாஸ் பயன்படுத்தி நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.
இதனால், செப்.30 வரை இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தால் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இ-பாஸ் நடைமுறையை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, நீலகிரி மாவட்டத்துக்குள் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு www.epass.tnega.org என்ற இணையதளம் மூலம் இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்திற்குள் வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேண்டுகோள்: நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொது மக்கள், நீலகிரி மாவட்ட பதிவு எண் டிஎன் 43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் சரிபார்ப்பு பணிக்காக வாகனங்களை நிறுத்தி சரிபார்ப்புக்கு பிறகு நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைய வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு உரிய ஒத்துழைப்பை பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அளிக்க வேண்டும்" என்று கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications