ஊட்டியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு.. விசாரணை ஆரம்பம்
ஊட்டியில் மர்ம காய்ச்சலுக்கு இளம் பெண் உயிரிழந்தார்.
ஊட்டி: மர்ம காய்ச்சல் காரணமாக ஊட்டியில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிங்கர்போஸ்ட் அருகே வசித்து வருபவர் பானு. வயது 34. இவரது கணவர் சாதிக் அந்த பகுதியில் மளிகை கடை ஒன்றினை வைத்திருக்கிறார். 2 இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.

பனிப்பொழிவு
ஊட்டியில் சென்ற மாதம் முழுவதும் கொட்டி தீர்த்தது. தற்போது கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24-ந் தேதி பானுவுக்கு காய்ச்சல் ஏற்படவே அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.

தனியார் மருத்துவமனை
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் காய்ச்சல் குறையவே இல்லை. இதனால் பதட்டமடைந்த உறவினர்கள் பானுவை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர்.

உயிர் பிரிந்தது
அங்கு பானுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மெதுவாக பானுவுக்கு காய்ச்சல் குணமாக தொடங்கியது. இதையடுத்து, 2 தினங்களுக்கு முன்பு அவர் வீடு திரும்பினார். ஆனால் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே பானுவுக்கு மீண்டும் காய்ச்சல் அதிகமானது. மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் பானு உயிர் பரிதாபமாக பிரிந்தது.

விசாரணை ஆரம்பம்
இதுகுறித்து மருத்துவர்கள் சொல்லும்போது, பானுவுக்கு டெங்குவும் இல்லை, பன்றி காய்ச்சலும் இல்லை. எதனால் அவர் இறந்தார் என்றும் தெரியவில்லை. ஆரம்பத்திலேயே அலட்சியப்படுத்தாமல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்றனர். எனவே பானு எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications