கொடநாடு வழக்கு! "குஜராத்திற்கு அனுப்பப்பட்ட கனகராஜ் மொபைல்!" நீதிமன்றத்தில் சிபிசிஐடி சொன்ன மேட்டர்
நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நீலகிரி செசன்ஸ் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சிபிசிஐடி தரப்பில் வழக்கறிஞர் முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களா ஒன்று அமைந்துள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை கோடைக் காலங்களில் இங்கே சென்று ஓய்வெடுப்பது வழக்கம்.

ஜெயலலிதா இருந்த வரை இது குட்டி தலைமைச் செயலகம் போலவே செயல்பட்டதாகக் கூட கூறுவார்கள். அந்தளவுக்குத் தமிழக அரசியலில் முக்கியமான இடமாக இருந்த கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா இறந்த பிறகு மோசமான சம்பவங்கள் அரங்கேறின.
கொடநாடு சம்பவம்: கடந்த 2017ஆம் ஆண்டு இந்த கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. சேலம் அடுத்துள்ள ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து இந்த சம்பவத்தைச் செய்ததாகக் கூறப்பட்டது.
அங்கிருந்த விலையுயர்ந்த வாட்ச்களை அவர்கள் கொள்ளையடிக்கச் சென்றதாகவும் போலீசார் தரப்பில் அப்போது கூறப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேரைக் கேரளா போலீசார் கைது செய்தனர்.
சிபிசிஐடி விசாரணை: இந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நீலகிரி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இடையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் 49 பேர் அடங்கிய குழு இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது. கடந்த அக். 8ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையின் போது சிபிசிஐடி போலீசார் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.
இதற்கிடையே அக்.13ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கனகராஜின் செல்போன் இருப்பிடம், அவர் எந்தெந்த எண்களுக்குப் பேசியிருந்தார் என்பது குறித்த தகவல்களைச் சேகரித்து வருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். அப்போது வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அப்துல் காதர், அந்த எண்கள் யாருடையது, ஆய்வுக்கு எங்கே அனுப்பப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
மீண்டும் விசாரணை: குஜராத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்த சிபிசிஐடி, நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கோரினர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்திருந்தார். இதற்கிடையே அந்த வழக்கு இன்று மீண்டும் நீலகிரி செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 159 பேரிடம் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தனர். அதேநேரம், குஜராத் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட செல்போன் தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அந்தத் தகவல்கள் கிடைத்தால் விசாரணையில் பெரியளவில் உதவியாக இருக்கும் என்றும் சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டது.
மேலும், செல்போன் தகவல்கள் கிடைக்காத நிலையில், விசாரணைக்குக் கூடுதல் அவகாசத்தை சிபிசிஐடி போலீசார் கோரினர். இதை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை ஜன.5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications