யானையை உயிரோடு எரித்த.. 2 குரூரர்கள்.. தட்டி தூக்கியது போலீஸ்.. மசினகுடியில்..!
மசினகுடியில் யானையை தீ வைத்து எரித்த 2 பேர் கைதாகி உள்ளனர்
நீலகிரி: யானைக்கு உயிரோடு நெருப்பு வைத்த, குரூரர்கள் 2 பேரை மசினகுடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.. தலைமறைவாகி உள்ள இன்னொருவரை தேடி வருகின்றனர்.
Recommended Video

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு 40 வயது மதிக்கத்தக்க ஒரு யானை சுற்றி சுற்றி வந்தது.. பிறகுதான் அதன் முதுகில் காயம் இருந்தது தெரியவரவும், வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை தந்தனர்.. உடல்நிலையும் கொஞ்சம் கொஞ்சமாக தேறி மசினகுடி மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடியது.

இதனால் பொது மக்களுக்கு, ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் யானையை பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்க 3 நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் முடிவு செய்தனர்.. அதன்படி, முதுமலை கால்நடை டாக்டர்கள் யானைக்கு மயக்க மருந்தும் செலுத்தினர்.. யானை லேசாக மயக்கம் அடைந்தவுடன் கும்கி யானைகள் அதனருகே வந்தது.அப்போது அந்த காட்டு யானை, தனது தும்பிக்கையை நீட்டி கொஞ்சியது.
ஆனால், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் திடீரென கீழே விழுந்துவிட்டது.. இதனால் பதறிபோன வனத்துறையினர் சிகிச்சை தந்தும் யானையை காப்பாற்ற முடியவில்லை.. இதன்பிறகுதான் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டபோது, காதின் ஒரு பகுதி சிதைந்து ரத்தம் வழிந்தோடியுள்ளது... காதில் யாரோ நெருப்பை வைத்து எரித்துள்ளனர் என்று டாக்டர்கள் சொன்னார்கள்.
இந்நிலையில், இந்த கொடுஞ்செயலை செய்தவர்கள் யார் என்று போலீசார் தேடி வந்தநிலையில், இறந்த யானை மீது எரியும் டயர் வீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இது சம்பந்தமான சிசிடிவியும் வெளியாகி உள்ளது.. ஒரு தனியார் ரிசார்ட்டுக்கு அந்த யானை வந்துள்ளது.. அப்போது அதன்மீது எரியும் டூவீலரின் டயர்களை அந்த ரிசார்ட் ஊழியர்கள் வீசியுள்ளனர்.
நெருப்பு டயர் யானையின் தலை, காது பகுதியில் பற்றி கொண்டு எரிந்தது.. யானை வலி பொறுக்க முடியாமல் பிளிறி கொண்டே தவித்து ஓடுகிறது.. இந்த சிசிடிவி வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து யானை மீது எரியும் டயரை வீசிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. இதில் இன்னொருவர் சம்பந்தப்பட்டுள்ளாராம்.. அவர் தலைமறைவாகி விடவும் போலீசார் தேடி வருகிறார்கள்.. கைதானவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே யானையை தீ வைத்து எரித்த சொகுசு விடுதிக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உரிமம் இல்லாமல் அந்த விடுதி நடத்தப்பட்டு வந்தது இப்போது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதேபோல் மசினகுடி பகுதியில் இயங்கி வரும் மற்ற விடுதிகளிலும் முறையான ஆவணங்கள், உரிமம் உள்ளனவா என ஆய்வு செய்யப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications