பட்டா நிலத்தில் "விழுந்த" யானை.. மகிழும் மசினிகுடி.. நன்றியில் நீலகிரி.. கலக்கறாங்களே சுப்ரியா சாஹூ
நீலகிரி: நீலகிரியில் மயங்கி விழுந்த யானைக்கு தீவிர சிகிச்சை தரப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்தபடியே உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், ஒரு யானை இறந்துவிட்டது.. வயோதிகம் காரணமாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், அந்த யானை உயிரிழந்தது. எனினும், இறந்துபோன தாய் யானையிடம் பாச போராட்டம் நடத்தியது அதன் குட்டி யானை..

சத்தியமங்கலம்: இதையடுத்து, தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தன்னுடைய வருத்தத்தை பதிவிட்டிருந்தார்.. "அந்த தாய் யானை இறந்துவிட்டது, அனுபவம் வாய்ந்த 4 கால்நடை மருத்துவர்கள் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தும், அதன் உயிரை காக்க அத்தனை முயற்சிகள் எடுத்தும் கடைசியில் அது பலனளிக்கவில்லை. எங்கள் மனம் வேதனையடைந்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
அத்துடன், காடுகளில், வனப்பகுதிகளில் உள்ள விலங்குகளின் வாழ்க்கை போராட்டங்கள் குறித்தும், மிக விரிவாகவே விளக்கம் ஒன்றை அப்போது சுப்ரியா சாஹூ தந்திருந்தார்.
Kudos to the team at the Mudumalai Tiger Reserve which worked hard to revive an ailing young tusker. The tusker was treated by experienced Vets for exhaustion and dehydration. The young guy could not only get enough strength to stand up on his feet but also chased the treatment… pic.twitter.com/FhKZsvedqj
— Supriya Sahu IAS (@supriyasahuias) April 5, 2024
நீலகிரி மாவட்டம்: இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கோடைகாலம் துவங்கிவிட்டதால், கூடலூரை அடுத்துள்ள முதுமலை சுற்றுவட்டார வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி தற்போது நிலவுகிறது. எனவே, உணவு மற்றும் தண்ணீர் தேடி 6 வயது யானை குட்டி ஒன்று, மசினகுடி அருகே உள்ள தனியார் பள்ளி அருகே வந்தது.
அந்த யானை குட்டி பார்ப்பதற்கே மிகவும் சோர்வாக இருந்தது.. வெப்பம் கொளுத்தியதால், அந்த யானைக்குட்டியால் நடக்க முடியவில்லை.. பிறகு, திடீரென நடக்கமுடியாமல் மயங்கி விழுந்துள்ளது.
பட்டா நிலம்: பிறகு, மசினகுடி அருகே தனியார் பட்டா நிலத்தில், யானைக்குட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டுப் படுத்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வனத்துறையினரும் கால்நடை டாக்டர்களுடன் விரைந்து வந்தார்கள்.. யானைக்குட்டியை பரிசோதித்து பார்த்ததில், அதற்கு நீர்சத்து குறைவாக இருந்தால் மயங்கி விழுந்திருப்பது தெரியவந்தது... உடனே, சுமார் 2 மணி நேரமாக யானைக்கு சிகிச்சை தந்தனர்..
நீர்சத்து நிறைந்த உணவுகள் பால் மற்றும் அத்தியாவசிய மருந்துகளையும் வழங்கினார்கள்.. பிறகு வனத்துறையினர் அங்கிருந்து செல்லாமல், குட்டியானையின் உடல் நிலையை கிட்டத்தட்ட 3 மணி நேரமாக கண்காணித்தபடியே இருந்தனர்..
யானை சோர்வு: பிறகு எல்லாரும் ஒன்றுசேர்ந்து, யானையை தள்ளி தள்ளி எழுப்பினார்கள்.. அந்த யானை கண் விழித்து பார்த்ததுமே, மருத்துவ சிகிச்சை தந்த குழுவினரையே துரத்த ஆரம்பித்தது.. ஆனால், மெல்ல மெல்ல வனப்பகுதிக்குள் தானாகவே சென்றுவிட்டது. எனினும், சிகிச்சை அளித்த காட்டு யானையை, வனத்துறையினர் தனிக்குழு அமைத்து தொடர்ந்து கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு தமிழ்நாடு வனத்துறை தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, தன்னுடைய பாராட்டுக்களை வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "முதுமலை புலிகள் சரணாலயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம் யானையை உயிர்ப்பிக்கக் கடுமையாகப் போராடிய குழுவினருக்குப் பாராட்டுக்கள். சோர்வு மற்றும் நீரிழப்புக்கு அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நடமாட்டம்: அதன்பின் யானை எழுந்து நின்று சிகிச்சை அளித்த குழுவினரைத் துரத்தி விட்டு மீண்டும் காட்டுக்குள் சென்றது. யானை நடமாட்டத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். முதுமலை வனத்துறை மற்றும் யானைக்குச் சிகிச்சை அளித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications