மண்டைக்கேறிய தந்தையின் காமம்.. அரசு அதிகாரிகளிடம் புகார் தந்த சிறுமி! இப்ப 3வது கணவனுடன் தாய் ஓட்டம்
ஊட்டி: குன்னூரில் நடந்த சம்பவம், ஒட்டுமொத்த நீலகிரி மாவட்ட மக்களுக்கும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி கொண்டிருக்கிறார்கள். 3வது கணவனுடன் ஓட்டம் பிடித்த பெண்ணையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வசித்து வரும் 40 வயது பெண், ஏற்கனவே திருமணமானவர்.. இவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பிரிந்து 2வது திருமணம் செய்தார்..

3வது திருமணம்
2வது கணவருடன் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அவரையும் விட்டு பிரிந்தார்.. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் 3வது திருமணமும் செய்துகொண்டுள்ளார். தற்போது 3வது கணவருடன்தான், தன்னுடைய 2 பெண் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.. கணவன் - மனைவி இருவருமே அந்த பகுதியில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
இதனிடையே, கடந்த பிப்ரவரி 25ம் தேதி, 3 வது கணவர் வேலையை முடித்துவிட்டு சீக்கிரமாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் 12 வயது சிறுமி தனியாக இருந்த நிலையில், அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.. அத்துடன் இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியிருக்கிறார்.
பள்ளி ஆசிரியையிடம் சென்ற சிறுமி
பிறகு வீட்டிற்குள் தன்னுடைய அம்மா வந்ததுமே, சிறுமி நடந்த விஷயத்தை கண்ணீருடன் சொல்லி உள்ளார்.. இதைக்கேட்ட தாய், இந்த விஷயத்தை சொல்லாதே என்றாராம்.. இதைக்கேட்டு அதிர்ந்துபோன சிறுமி, யாரிடம் இதைபற்றி சொல்வது என தெரியாமல், தன்னுடைய பள்ளிக்கு சென்று ஆசிரியையிடம் முறையிட்டிருக்கிறார்..
அந்த ஆசிரியைதான், சிறுமியை வைத்து, உடனடியாக 1098 என்ற எண்ணில் குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.. சிறுமியிடமிருந்து இப்படியொரு புகார் வந்ததை அறிந்த, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், உடனடியாக சம்பந்தப்பட்ட சிறுமியிடம் நேரடியாகவே இதுகுறித்து விசாரித்துள்ளனர்..
போக்சோவில் வழக்கு பதிவு
இதற்கு பிறகு குன்னூர் மகளிர் போலீசார், சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை மீது போக்சாவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், 3வது கணவனுடன் சேர்ந்து, அந்த தாயும் இப்போது தலைமறைவாகியிருக்கிறார்.. எனவே, அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
6 மாதத்துக்கு முன்பு, இதே நீலகிரி மாவட்டம் குன்னூர் தந்தைக்கு நீதிமன்றம் மறக்க முடியாத தண்டனை ஒன்று தந்திருந்தது.. அதாவது, கூலி தொழிலாளிக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. இவர் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் மிக்கவர் என்பதால், மனைவி இவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். 2 பெண் குழந்தைகள் இருந்தாலாவது, கணவர் திருந்துவார் என்று நினைத்து அவரிடமே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
6 மாதத்துக்கு முன்பு தீர்ப்பு
2 பெண் குழந்தைகளும் தந்தையின் பாதுகாப்பில் இருந்து வந்தனர். கடந்த 2022ம் வருடம், மூத்த பெண் 10ம் வகுப்பு படித்து வந்தபோது, பட்டப்பகலில் குடிபோதையில், மகளை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்... இதை வெளியில் சொன்னால் தங்கையை கொன்றுவிடுவதாக மிரட்டி, தொடர்ந்து பலமுறை மகளை பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் அந்த சிறுமி கர்ப்பமாகி, ஒருகட்டத்தில் உடல்நிலையும் மோசமாகிவிட்டது. இறுதியில் மருத்துவமனையில் டாக்டர்கள் இதை அறிந்து அதிர்ச்சி அடைந்து, போலீசுக்கு விஷயத்தை சொன்னார்கள்..
இந்த வழக்கு, ஊட்டி கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், தந்தைக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசிடம் இருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு பெற்று தர மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications