வாட்டிய தனிமை.. அதிகரித்த மன அழுத்தம்.. 21 வயசுதான்.. 3வது மாடியிலிருந்து குதித்து.. கொடுமை!
ஊட்டி: இத்தாலியில் டாக்டருக்கு படிக்கபோன ஊட்டி இளைஞர், 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. தனிமையும் மன அழுத்தமும் 21 வயசு மாணவனை கொன்றேவிட்டது!
நீலகிரி மாவட்டம், கீழ்க்கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சதானந்த்... இவர் ஒரு தேயிலை விவசாயி. இவரது மகன் பிரதிக்ஷ்.. 21 வயதாகிறது.. இத்தாலியிலுள்ள ஒரு மெடிக்கல் காலேஜில் படித்து வருகிறார்.. இது 3-ம் வருடம்.

இப்போது லாக்டவுன் என்பதால் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.. இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் திடீரென 3-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த தகவலை கேட்டு கதறி துடித்து அழுதனர்.. இந்த மாணவனின் அண்ணன், இத்தாலியிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் கெமிக்கல் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறாராம்.. அவர் வீட்டுக்கும் இவரது ரூமுக்கும் கிட்டத்தட்ட 50 கிமீ தூரம் இருக்குமாம்.. அதனால் தனியாகவே பிரதிக்ஷ் காலேஜ பக்கத்திலேயே ரூம் எடுத்து தங்கி படித்து வந்திருக்கிறார்.
தற்போது இத்தாலியில் கொரோனா அதிகமாக இருக்கவும், எல்லா மாணவர்களும் கிளம்பி சொந்த நாட்டுக்கு சென்றுவிட்டனர்.. பிரதிக்ஷ் மட்டுமே இந்தியாவை சேர்ந்தவர்.. அவரால் அங்கிருந்து கிளம்பி வரவும் முடியவில்லை.. அதனால் ரூமுக்குள்ளேயே இருந்திருக்கிறார்.. தொடர்ந்து ஒரே ரூமுக்குள் அடைந்து கிடந்ததால், மன அழுத்தம் அதிகமாகிவிட்டது.
இந்த விஷயம் அவரது அண்ணனுக்கு மெதுவாகத்தான் தெரிந்தது.. எனினும் உடனடியாக தம்பியை அழைத்து கொண்டு அங்கிருந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.. கிட்டத்தட்ட ஒரு மாதம் சிகிச்சை தந்துள்ளனர்.. பின்னர் அண்ணன் வீட்டில் இருந்தபடியே ஒரு பக்கம் ஆன்லைனில் படிப்பும் இன்னொரு பக்கம் சிகிச்சையும் நடந்து வந்துள்ளது.
கடந்த 10-ம் தேதி தன் அப்பாவுடன் வீடியோ காலில் பேசும்போதுகூட, ரொம்ப மன அழுத்தம் உள்ளதாகவும் வரும் 13-ம் தேதி அதாவது இன்றைய தினம், இந்தியா வருவதாகவும் சொல்லி உள்ளார். ஆனால் என்ன ஆச்சோ தெரியவில்லை.. போனை கட் பண்ண அடுத்த சில நிமிடங்களில், அண்ணன் வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவரது சடலம் இந்தியா கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. டாக்டருக்கு படிக்க போன மாணவன், இப்படி திடீர் தற்கொலை செய்து கொண்டது நீலகிரியை மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications