Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருந்தாளியாய் நீலகிரிக்கு வந்து.. கூடலூர் இன்ஸ்பெக்டர் ரூமில் நுழைந்து.. அப்படியே மலைத்து போன ஏட்டு

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை புலிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அவைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.. இந்நிலையில், கூடலூர் காவல் நிலையத்தில் நடந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த மலை மாவட்டத்துக்கும் பீதியை தந்து வருகிறது.. இதனால் வனத்துறைக்கும், காவல்துறைக்கும் முக்கிய வேண்டுகோள் பொதுமக்கள் சார்பாக விடுக்கப்பட்டுள்ள. என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது... இதன் காரணமாக காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவுக்காக பசுந்தீவனத்தையும், குடிக்க தண்ணீரையும் தேடி பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறது.

Nilgiris Gudalur Inspector

அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்புகூட, ஊட்டி தலைகுந்தா அருகே அத்திக்கல் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் உள்ள வனப்பகுதியில் புலி ஒன்று ஓய்வெடுத்து கொண்டிருந்தது.. நடுரோட்டில் ஹாயாக படுத்துக் கிடந்த புலியை, அந்த வழியாக வாகனத்தில் சென்ற சிலர் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

இரும்பு கூண்டு

சாலையில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்த புலி எந்தவிதமான சலனமுமின்றி அருகில் உள்ள வனத்திற்குள் சென்றுவிட்டது.. இந்த புலி நடமாட்டம் தொடர்பாக வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பீதியில் இருந்து வருகிறார்கள்.

கடந்த வாரம்கூட, கோத்தகிரி நகரில் இரும்பு கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயை சிறுத்தை வேட்டையாட முயன்றது. இரும்பு கூண்டு மற்றும் நாய் தொடர்ந்து குரைத்ததால் சிறுத்தை திரும்பிச்சென்றது. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.

இப்போது, மீண்டும் சிறுத்தை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிற.. கூடலூர் - ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நடுவட்டம் பஜாருக்குள், நேற்றிரவு 8.30 மணிக்கு சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது..

வெலவெலத்து போன ஏட்டு

இரவு நேரம் என்பதால் புதர்களுக்குள் பதுங்கியவாறு வந்த சிறுத்தை, பஜாரில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்துவிட்டது.. அப்போது நுழைவு வாயில் அறை அதாவது செக்யூரிட்டி அறைக்குள் நுழைந்த சிறுத்தை, இன்ஸ்பெக்டர் உட்கார்ந்திருக்கும் அந்த ரூமை சுற்றிப் பார்த்தது..

சிறுத்தை ரூமுக்குள் நுழைந்த இந்த சமயத்தில், இன்னொரு ரூமில் போலீஸ் ஏட்டு ஒருவர் தன்னுடைய சீட்டில் உட்கார்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தார். திடீரென சிறுத்தை புலி ரூமுக்குள் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்., அத்துடன், உச்சக்கட்ட பீதியில், சத்தமும் போட முடியாமல், வெலவெலத்து போனார்.

நுழைவு வாயிலை பூட்டி

ஆனால், அந்த சிறுத்தையோ, ரூமுக்குள் சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்கிறதா?என்று தேடிப்பார்த்தது.. சாப்பிடுவதற்கு அங்கே ஒன்றுமில்லை என உணர்ந்த சிறுத்தை புலி, பிறகு மீண்டும் ரூமிலிருந்து வெளியேறி, வாசலுக்கு வந்து படிகட்டுகளில் இறங்கி வெளியே சென்றது.. புலி வந்து சென்றதை, அறையில் கதவு வழியாக பீதியுடன் பார்த்து கொண்டேயிருந்தார் போலீஸ் ஏட்டு.. சிறுத்தை வெளியே சென்றதை உறுதி செய்தவுடன், மெதுவாக வெளியே வந்து, நுழைவாயில் கதவை பூட்டினார்.
பிறகு, சிறுத்தை போலீஸ் ஸ்டேஷனுக்குள் வந்த சம்பவம் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து, நடுவட்டம் வனத்துறையினரும் அப்பகுதிக்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.. அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தபோதும், சிறுத்தை புலி அவைகளில் பதிவாகியுள்ளது.

ஆடிப்போன நீலகிரி

போலீஸ் நிலையத்திற்கு சிறுத்தை வந்து சென்ற விவரம் அதற்குள் அந்த பகுதி மக்களுக்கு காட்டுத்தீயாய் பரவி, அனைவரும் அந்த பகுதியில் திரண்டுவந்துவிட்டனர்.. கூண்டு வைத்து அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.. 8.30 மணிக்கு சிறுத்தை புலி, போலீஸ் ஸ்டேஷனுக்குள் வந்துசென்ற சம்பவம், நீலகிரியில் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+