டமார் சப்தம்.. ஹிந்தியில் அலறிய அதிகாரிகள்.. ஹெலிகாப்டர் விபத்தின்போது நடந்தது என்ன?
குன்னூர்: குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ராணுவ வீரர்களின் அலறல் குரல்களை கேட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்கள்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்திலிருந்து வருண் சிங் என்பவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.
இந்த விபத்தை அந்த காட்டேரி மலை கிராமத்தில் வசிப்பவர்கள் நேரில் பார்த்தனர். அவர்கள் கூறுகையில் வீட்டில் இருந்த போது பெரிய சப்தம் கேட்டது. என்னவென வந்து பார்த்தபோது ஹெலிகாப்டர் ஒன்று எரிந்தபடியே கீழே விழுந்தது.

ஹெலிகாப்டர்
அதில் இருந்த இருவர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கீழே விழுந்தனர். ஹெலிகாப்டரில் இருந்து 2 பேரின் அலறல் குரல் கேட்டது. அவர்கள் இந்தியில் ஏதோ பேசினார்கள். என்னவென புரியவில்லை. எனினும் இது போன்ற சூழலில் தங்களை காப்பாற்ற வேண்டும் என்றுதான் அவர்கள் கேட்டிருப்பர். உடனே நாங்கள் அந்த இடத்திற்கு ஓடினோம். ஆனால் தீ மளமளவென எரிந்ததால் எங்களால் அருகே செல்ல முடியவில்லை.

தண்ணீர்
தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் கொடுத்தோம். இருப்பினும் எங்கள் வீடுகளில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து அணைக்க முற்பட்டோம். ஆனாலும் தீ எரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினரும் போலீஸாரும் வந்தனர். காப்பாற்றுங்கள் என அழைத்தவரை கூட எங்களால் காப்பாற்ற முடியாமல் போனது வருத்தமாக உள்ளது.

வருத்தம்
விபத்தில் இந்திய நாட்டின் தலைமை தளபதியே இறந்தது மேலும் வருத்தமளிக்கிறது என்றனர். அது போல் அந்த மலை கிராமத்தை சேர்ந்த நிறைய பேர் இந்த விமானம் பயங்கர சப்தத்துடன் கீழே விழுந்ததை கண்டனர். அவர்களும் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற ஓடோடி சென்றனர். ஆனால் முடியவில்லை.
Recommended Video

வெள்ளை பெட்ரோல்
வெள்ளை பெட்ரோல் என்பதால் அதன் வீரியம் அதிகமாக இருந்தது. வெடித்து வெடித்து சிதறியது. இதனால் அதன் அருகே போய் யாராலும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அறிய கருப்பு பெட்டிகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications