சரஸ்வதிக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள்.. நேரில் பார்த்துவிட்ட மகள்.. அடித்தே கொன்ற தாய்க்கு 7வருட ஜெயில்
மகளை கொன்ற தாய்க்கு 7 வருட ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
ஊட்டி: சரஸ்வதிக்கு ஏகப்பட்ட கள்ளக்காதலர்கள்.. தன் சந்தோஷத்துக்கு மகள் தொந்தரவாக இருந்ததால், கட்டையால் அடித்து அவரை கொன்றே விட்டார் சரஸ்வதி.. இப்போது 7 வருஷம் ஜெயில் தண்டனை அவருக்கு கிடைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பிங்கர்போஸ்ட் என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் சரஸ்வதி.. 29 வயதாகிறது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.. இவருக்கு 5 குழந்தைகள்.

ஆனால் சரஸ்வதிக்கு நிறைய ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.. பல பேருடன் கள்ளக்காதல் நீடித்தும் வந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த 2017-ம் வருஷம், அக்டோபர் மாதம் 15-ந் தேதி சரஸ்வதியின் மகள் திரிஷா திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தார்... திரிஷாவுக்கு 4 வயசு.
குழந்தையை டெஸ்ட் செய்த டாக்டர்கள் திரிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டனர்.. அதனால் இந்த விஷயம் போலீசுக்கு போனது.. ஊட்டி நகர மேற்கு போலீசார் சந்தேக மரணமாக இதன்மீது கேஸ் பதிவு செய்தனர்.. விசாரணையும் ஆரம்பமானது.
அதற்குள் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அதில் திரிஷாவின் தலையில் பலமான அடிபட்டுள்ளதாகவும், யாரோ கட்டையால் அடித்துள்ளதாகவும் கூறப்பட்டது.. அதனால் முதல் கிடுக்கிப்பிடி விசாரணையே சரஸ்வதியிடம் ஆரம்பித்தனர்.. எடுத்த எடுப்பிலேயே உளறி கொட்டினார் சரஸ்வதி.
கள்ளக்காதல் செய்யும்போது ஒருமுறை திரிஷா நேரில் பார்த்துவிட்டாராம்.. இந்த காதல்களுக்கு எல்லாம் திரிஷா தடையாக இருந்ததால்தான் கட்டையால் அடித்து கொன்றதாக பெற்ற தாய் வாக்குமூலம் தந்தார். இதையடுத்து சரஸ்வதியை ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் ஊட்டி மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணையும் நடந்து வந்த நிலையில், தற்போது தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.. அதன்படி, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற மகளையே கொலை செய்த சரஸ்வதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் சரஸ்வதியை கோவை மத்திய சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர். சரஸ்வதியை கைது செய்தபோதே, மற்ற குழந்தைகள் 4 பேரையும் ஒரு காப்பகத்தில் சேர்த்தனர்.. அங்குதான் அவர்கள் இப்போதும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications