நள்ளிரவில் வாகன சோதனை.. 50 கிமீ மலையில் போலீஸையே.. அலறவிட்ட டிரைவர்.. ஆடிப்போன போலீஸ்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நள்ளிரவில் சரக்கு வாகனத்தை சோதனை செய்ததால் ஆத்திரம் அடைந்த டிரைவர், போலீஸ்காரரை கடத்தி சென்றார். இது குறித்து தகவல் அறிந்த கேரள போலீசார் சரக்கு லாரியை மடக்கி பிடித்து போலீஸ்காரரை மீட்டனர்.
போலீஸ்காரர்கள் வாகன ஓட்டிகளிடம் அடிக்கடி சோதனையில் ஈடுபடுவார்கள். அப்படி சோதனை செய்யும் போது,தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்பட்டது தெரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், அதிக அபராதம் மற்றும் சிறைதண்டனையும் கிடைக்கும். இதனால் போலீசார் வாகன சோதனை நடத்தும் போது, அதில் இருந்து தப்பிக்க கடத்தல்காரர்கள் பல்வேறு ஏமாற்று முறைகளை கையாள்வார்கள்.
இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர், தன்னுடைய வாகனத்தை சோதனை செய்த போலீஸ்காரர் , வாகனத்தில் அப்படியே கடத்தி சென்ற சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் கேரள எல்லையில் நடந்துள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

வாகன சோதனை
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் மலப்புரத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இங்குள்ள நாடுகாணி சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெள்ளி, மற்றொரு போலீஸ்காரர் பழனிச்சாமி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது கூடலூரில் இருந்து கேரளா நோக்கி சரக்கு வாகனம் வந்தது.

கடத்தல்
நாடுகாணியில் போலீசார் சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தார்கள். இந்த சமயத்தில் போலீஸ்காரர் பழனிச்சாமி வாகனத்தில் ஏறி சோதனை செய்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனத்தை டிரைவர் கேரளாவுக்கு ஓட்டி சென்றார். அப்போது போலீசார் சத்தம் போட்டும் வாகனத்தை நிறுத்தவில்லை. மேலும் சோதனை செய்வதற்காக ஏறிய போலீஸ்காரர் பழனிச்சாமியும் லாரியில் கடத்தப்பட்டார். அவரால் லாரியில் இருந்து இறங்க முடியவில்லை.

போலீஸ் மீட்பு
இதுகுறித்து தேவாலா போலீசார் உயர் அதிகாரிகளுக்கும், கேரள மாநில நிலம்பூர் போலீசாருக்கும் உடனடியாக தமிழக போலீசார் தகவல் தெரிவித்தனர். தேவாலா போலீசார் சரக்கு வாகனத்தை தேடி சென்றனர். பின்னர் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலம்பூர் பகுதியில், கேரள போலீசார் சரக்கு வாகனத்தை மடக்கி பிடித்தார்கள். அங்கு தான் கடத்தப்பட்ட போலீஸ்காரர் பழனிச்சாமியை போலீசாரால் பிடிக்க முடிந்தது.

ரேஷன் அரிசி
பின்னர் தேவாலா போலீசில் டிரைவர் ஒப்படைக்கப்பட்டார். சரக்கு வாகனத்துக்குள் 200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ரசீது இல்லாத 150 கிலோ தேயிலைத்தூள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உணவு கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

ஏன் அப்படி
விசாரணையில் டிரைவர் கூடலூர் அருகே பாடந்தொரை பகுதியை சேர்ந்த தெள்ளத் (வயது 42) என்பதும், ரேஷன் அரிசி கடத்தி சென்ற போது போலீசார் சோதனையில் சிக்காமல் இருக்க, சரக்கு வாகனத்தில் போலீஸ்காரரை கடத்தியதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்தனர்.
-
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications