நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹய்யா.. ஹாயாக வர்றதை பார்த்தீங்களா.. விடிகாலையில் தெறித்து ஓடிய கூட்டம்.. வெலவெலத்த ஊட்டி

ஊட்டி நகருக்குள் கரடி ஒன்று இன்று விடிகாலையில் வலம் வந்துள்ளது

Google Oneindia Tamil News

நீலகிரி: ஊட்டிக்குள் ஒரு கரடி நுழைந்துவிட்டதால், பொதுமக்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.. அந்த கரடியைத்தான், வனத்துறையினர் காலையில் இருந்து தேடி கொண்டிருக்கிறார்கள்.

Recommended Video

    ஊட்டிக்குள் நுழைந்த கரடி.. விடிகாலையில் தெறித்து ஓடிய கூட்டம்

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த காட்டுபகுதியை கொண்டது... இந்த வனப்பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வசிப்பிடமாக உள்ளது.

    வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் விளைநிலங்களின் அருகே உலா வருவது வழக்கமாக இருந்து வருகிறது..

    கட் செய்யப்பட்ட ஆடியோ.. வீடியோ மட்டும்தானாம்! ஊட்டி ஸ்கூலில் ஆய்வு செய்த ஆளுநர் ரவி.. கட் செய்யப்பட்ட ஆடியோ.. வீடியோ மட்டும்தானாம்! ஊட்டி ஸ்கூலில் ஆய்வு செய்த ஆளுநர் ரவி..

     ஹாயாக நடந்த கரடி

    ஹாயாக நடந்த கரடி

    சில சமயம், ஊட்டியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டது.. கடும் வறட்சி காரணமாக, தண்ணீர், உணவு தேடி, சில சமயம் ஊருக்குள்ளும் வந்துவிடுகின்றன. அந்த வகையில், நகரப்பகுதியில் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அடிக்கடி தென்படும்.. ஆனால், இன்று அதிகாலை ஒரு கரடி வந்துவிட்டது... அக்ரஹாரம் பகுதியில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதியில் உலா வந்துள்ளது.

    அக்ரஹாரம்

    அக்ரஹாரம்

    ஊட்டி கமர்சியல் சாலை வழியாக மையப்பகுதியில் உள்ளதுதான் இந்த அக்ரஹாரம் என்ற இடம்.. அந்த பகுதியிலேயே 2 முறை வலம் வந்துள்ளது.. பிறகு அங்குள்ள வீடு ஒன்றில் புகுந்துவிட்டது.. அப்போது, தெரு நாய்கள் குரைத்ததால் அந்த கரடி அருகில் உள்ள புதருக்குள் சென்று மறைந்தது.. இப்படியே ஒவ்வொரு தெருவாக உணவு தேடி சென்றுள்ளது.. ஒவ்வொரு தெருவிலும் அந்தக் கரடியை பார்த்துமே குரைத்து கொண்டு நாய்கள் தலைதெரிக்க ஓடியிருக்கின்றன..

     கேமராவில் பதிவு

    கேமராவில் பதிவு

    நாய்கள் நீண்ட நேரமாக குரைக்கவும், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது கரடி குடியிருப்பு பகுதியில் கூலாக நடந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

     வெலவெலத்த ஊட்டி

    வெலவெலத்த ஊட்டி

    இன்னும் கரடி சிக்கவில்லை.. தொடர்ந்து குடியிருப்பு அப்பகுதியில் கரடியின் நடமாட்டம் காணப்பட்டால் கரடியை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அப்பகுதி மக்களுக்கு வனத்துறையினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.. இன்றைய தினம், கரடி நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இதனால் ஊட்டி மக்கள் வெலவெலத்து போயுள்ளனர்..

    English summary
    ooty fear and bear came across the city and roamed the residential area today morning ஊட்டி நகருக்குள் கரடி ஒன்று இன்று விடிகாலையில் வலம் வந்துள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X