Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதகை மலை ரயில் சேவை மீண்டும் ரத்து.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்! எப்போது தொடங்கும்?

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: உதகை மலை ரயில் சேவை மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. மண் சரிவால் மீண்டும் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் (ஊட்டி) வரை நீலகிரி மலை ரயில் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் கிளம்பி பகல் 12.30 மணிக்கு ஊட்டியை சென்றடையும். இந்த மலை ரயிலில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பயணிப்பது வழக்கம்.

Ooty Hill train service has been suspended again

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த மலை ரயில் கடந்த 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமும், குன்னூர் முதல் உதகை வரை டீசலிலும் இந்த மலை ரயில் இயக்கப்படுகிறது. 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் மலை ரயிலில் இருந்து, மலைகள், அடர்ந்த காடுகள், நீர்வீழ்ச்சிகள் என இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண முடியும்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடை விடாமல் பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு இடங்களில் அவ்வப்போது மண் சரிவு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது.

அடர்லி மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே, பாறைகள் உருண்டு ரயில் பாதையில் விழுந்திருந்ததால், மலை ரயில் சேவை நேற்று முன்தினம் வரை 4 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த பாறைகள் அகற்றப்பட்டு மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று மலை ரயில் வழக்கம் போல் இயக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் இந்த ரயிலில் பயணித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை முதல் இன்று காலை வரை நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கல்லார் - ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையேயான பகுதியில் மீண்டும் பாறைகள் சரிந்து, மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

மண் சரிவை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும், மண் சரிவை அகற்றும் பணிகள் முடிய மேலும் சில மணி நேரங்கள் ஆகும் என்பதால் மேட்டுப்பாளையம் - குன்னூர் - உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதனால் இன்று மேட்டுப்பாளையம் - உதகை இடையே காலை 7.10 மணிக்கு புறப்பட இருந்த ரயிலும், உதகை - மேட்டுப்பாளையம் இடையே இன்று பகல் 2 மணிக்கு புறப்பட இருந்த ரயிலும் ரத்து செய்யப்பட்டுவதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி பெய்த கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் சேவை 4 நாட்களுக்குப் பிறகு நேற்று தான் மீண்டும் தொடங்கி இருந்த நிலையில், மீண்டும் இன்று மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நாளை மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+