ஊட்டி: 5 சிறுமிகளுக்குத் துரோகம் செய்த முன்னாள் காவலருக்குச் சாகும் வரை சிறை
ஊட்டி: குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியவரே குற்றவாளியானால்? ஊட்டியில் 5 சிறுமிகள் தொடர்பான வழக்கில், நீலகிரி மகிளா நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை ஒரு "ஹீரோ" போலக் காட்டி, ஏற்கனவே திருமணமானதை மறைத்து, ஒவ்வொரு சிறுமியிடமும் "உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று ஆசை வார்த்தை கூறி தனித்தனியாக ஏமாற்றியுள்ளார் ஊர்க்காவல் படை/வேட்டை தடுப்பு காவலர் உமேஸ்வரன்.
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த 26 வயது பட்டதாரி வாலிபர் உமேஸ்வரன். இவர் சாதாரணமானவர் கிடையாது.. ஊர்க்காவல் படையிலும், வேட்டை தடுப்பு காவலராகவும் பணியாற்றியவர். அதாவது சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவர் தான் உமேஸ்வரன். ஆனால், இவர் தனது பெட்டிக்கடைக்கு வரும் 10-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகளைக் குறிவைத்திருக்கிறார்.

தன்னை ஒரு "ஹீரோ" போலக் காட்டி, ஏற்கனவே திருமணமானதை மறைத்து, ஒவ்வொரு சிறுமியிடமும் "உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று ஆசை வார்த்தை கூறி தனித்தனியாக ஏமாற்றியுள்ளார். ஒரு மாணவியுடன் இருக்கும் தொடர்பு மற்றவருக்குத் தெரியாதபடி மிகக் கச்சிதமாக துரோகம் செய்திருக்கிறார் உமேஸ்வரன்..
இந்தக் கொடுமை கடந்த ஆண்டு வெளிச்சத்திற்கு வந்ததும், பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டம் பாய்ந்தது. பொதுவாக இது போன்ற வழக்குகள் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படும். ஆனால், இந்த வழக்கில், குன்னூர் மகளிர் போலீசார் மிகத் துல்லியமான ஆதாரங்களைத் திரட்டினார்கள்.
அரசு தரப்பு வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட மாணவிகளின் தரப்பில் வலுவான வாதங்களை முன்வைத்தார். இதனால் வெறும் ஓராண்டிற்குள் அனைத்து விசாரணைகளையும் முடித்து, "சாகும் வரை ஆயுள் தண்டனை" என்ற மரண அடி போன்ற தீர்ப்பை ஊட்டி நீதிமனற்ம் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் நாம் அறிய வேண்டியது. பெட்டிக்கடைக்கோ அல்லது ரீசார்ஜ் செய்யவோ அல்லது வேறு எதற்காகவே பிள்ளைகளை வெளியே அனுப்பும்போது, அவர்கள் யாரிடம் பழகுகிறார்கள் என்பதில் ஒரு கண் இருக்க வேண்டும். பெண் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி, அவர்களிடம் ஒளிவு மறைவு இல்லாமல் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துங்கள்.
நம் பெற்றோர் நமக்காக எந்த நிலையிலும் உடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.. மாறாக எது நடந்தாலும் சொல்வதற்கு பயப்படும் நிலையை ஏற்படுத்திவிடார்கள்.. அதே சமயம், தப்பு செய்தவன் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், "சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்பதற்கு இந்த ஊட்டி மகிளா நீதிமன்றத் தீர்ப்பு ஒரு மாபெரும் சாட்சியாக அமைந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications