நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புது வெள்ளை மழை பொழிகின்றது..உறைபனியால் நடுங்கும் உதகை மக்கள்..கொடைக்கானலில் கடுங்குளிர்

Google Oneindia Tamil News

நீலகிரி: உதகையில் உறைபனி காலம் தொடங்கியுள்ளது. எங்கும் வெள்ளை மழை பொழிகிறது. பச்சைப் புற்களின் மீது வெள்ளை போர்வை போர்த்தப்பட்டுள்ளது. கடுங்குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் பகல் நேரத்திலும் கடுங்குளிர் நிலவுவதால் சுற்றலா பயணிகள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

உதகையில் துவங்கியது உறைப்பனி பொழி, மினி காஷ்மீர் போல் காட்சி அளிக்கும் உதகை, உதகையில் நிலவிவரும் கடும் குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் ஆகும்.

பாஜக வேண்டாம்.. நீங்க வாங்க.. தடாலடி 'தலை’யை இழுக்க ஈபிஎஸ் அணி முயற்சி! தூது விடும் கொங்கு சீனியர்! பாஜக வேண்டாம்.. நீங்க வாங்க.. தடாலடி 'தலை’யை இழுக்க ஈபிஎஸ் அணி முயற்சி! தூது விடும் கொங்கு சீனியர்!

உறைப்பனி

உறைப்பனி

நீலகிரியில் பனிப்பொழிவு தொடங்கி விட்டது. கடந்த நவம்பர் 15 தேதி முதல் நேற்று வரை நீர் பனிப்பொழிவு இன்று அதிகாலை உதகை, தலைக்குந்தா, குதிரைபந்தைய மைதானம், காந்தள் போன்ற பகுதிகளில் உறைப்பனி பொழிவு காணப்பட்டது.

வெள்ளை கம்பளம்

வெள்ளை கம்பளம்

உறைப்பனி பொழிவு காரணமாக சாலையோரங்களில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள், நீர்நிலைகள்,பச்சை புல்வெளிகளில் வெள்ளை கம்பளம் விரித்தார் போல் காட்சியளித்தது. இரவு முதல் பனிப்பொழிவு பெய்து வரும் நிலையில் காலை 9 வரை கடும் குளிர் நிலவும் சூழல் உருவாகி உள்ளது.

உறைய வைக்கும் குளிர்

உறைய வைக்கும் குளிர்

இதனால் காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்பவர் குறைந்த அளவே காணப்படுகிறார்கள்.மேலும் தற்போதே பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும் நிலையில் வரும் நாட்களில் -0 டிகிரியை எட்ட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கொடைக்கானல்

கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டு தோறும் டிசம்பர் கடைசி வாரம் ஜனவரி தொடக்கம் என மார்கழி மாதத்தில் உறைபனி காணப்படும். இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே வெப்பநிலை வெகுவாகக் குறைந்து 6 டிகிரி செல்சியசாக உள்ளது. இதனால் இரவில் கடும் குளிர் உணரப்படுகிறது. பச்சைப் புற்கள் மீது பனி படிந்துள்ளதால் வெண்மை நிறமாகக் காட்சியளிக்கிறது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இரவில் கடும் குளிர் உணரப்பட்டது. இதனால் கொடைக்கானல் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரால் காலையில் வெகுநேரம் கழித்தே எழுந்திருக்கின்றனர். மலை முகடுகளில் பனிமூட்டம் காணப்படுகிறது. மலைப்பகுதியில் காலையில் கடைகளும் தாமதமாகவே திறக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் பலர் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் சொந்த ஊர் திரும்புகின்றனர்.

English summary
The frost season has begun at dawn. White rain is falling everywhere. The normal life of the people has been affected by the severe cold. Due to severe cold in Kodaikanal during the day, the normal life of tourists and public has been affected.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X