ஊட்டியில் கஞ்சா விற்ற காவலர்.. அட்டப்பாடி டூ நீலகிரி.. சீக்ரெட் அம்பலமானது எப்படி?
ஊட்டி: நீலகிரி மாவட்டம் உதகையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து காவலர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா விற்றதாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கஞ்சாவை அட்டப்பாடியில் இருந்து எப்படி நீலகிரிக்கு கொண்டு வந்தார், எவ்வளவு காலமாக இவ்வாறு செயல்பட்டிருக்கிறார் என்று தீவிரவிசாரணை நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த குரூஸ் (26) என்ற இளைஞர் கடந்த 21ம் தேதி உதகையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விற்பனை செய்ய எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்படுகிறது என காவல்துறையினர் குரூஸிடம் நடத்திய விசாரணையில் உதகை நகர போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வரும் நசீர் அகமது(26) என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தான் கஞ்சா விற்பது தொடர்பான விஷயம் காவல்துறையினருக்கு தெரிந்து விட்டதால் காவலர் நசீர் முகமது தலைமறைவானார். அவரை 3 தனிப்படைகள் அமைத்து கோவையில் வைத்து கைது செய்து காவல் துறையினர் உதகை அழைத்து வந்தனர். பின்னர் உதகை நகர காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.
விசாரணையில் கேரள மாநிலம் அட்டப்பாடி அருகேயுள்ள கோட்டதொரை பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்ற கஞ்சா வியாபாரியிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து நீலகிரியில் விற்பனை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து உதகை நகர மத்திய காவல் நிலைய போலீசார் அட்டபாடி அருகே உள்ள கோட்டதொரைக்கு விரைந்தனர். அங்கு மோகனசுந்தரத்தை கைது செய்தனர். பின்னர் அவரது இருப்பிடத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் 17 கிரோ கஞ்சா சிக்கியது. கஞ்சா வியாபாரியை உதகை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதனிடையே கடந்த 21ம் தேதி நடந்த கஞ்சா விற்பனை தொடர்பான தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு முறையாக தெரிக்காத உதகை நகர போக்குவரத்து உதவி ஆய்வாளர் அருண் கூடலூருக்கும், உதகை நகர மத்திய காவல் நிலைய தனிபிரிவு காவலர் ஜெயகுமாரை தேவாலா காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி., நிஷா உத்தரவிட்டுள்ளார்.
கஞ்சா விற்றதாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கஞ்சாவை அட்டப்பாடியில் இருந்து எப்படி நீலகிரிக்கு கொண்டு வந்தார், எவ்வளவு காலமாக இவ்வாறு செயல்பட்டிருக்கிறார், கஞ்சா வியாபாரிகளிடம் கொடுத்து விற்பனை செய்துள்ளரா அல்லது தாேன விற்பனை செய்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கஞ்சா விற்பனையில் மேலும் சில காவலர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications