குன்னூரில் தொழுகை முடித்து வந்தவர்களிடம்.. போட்டி போட்டு வாக்கு சேகரித்த அரசியல் கட்சியினர்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் இஸ்லாமியர்கள் ஈத்கா மைதானத்தில் ரமலான் தொழுகை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களிடம் போட்டி போட்டுக் கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர்.
நாடு முழுவதும் 18வது லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 16ஆம் தேதி தேர்தல் தேதியை அறிவித்தார் இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த ஆண்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 22 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகமும் ஒன்று. தமிழகம் + புதுச்சேரி என 40 தொகுதிகளுக்கு ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

எனவே அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இன்று தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகை கொண்டாடும் நிலையில், குன்னூர் மோர்ஸ் கார்டன் பகுதியில் குன்னுரை சேர்ந்த இஸ்லாமியர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின் அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், அப்பகுதிக்கு பிரச்சார வாகனங்களுடன் வந்த திமுக மற்றும் அதிமுக, நாம் தமிழர் கட்சியினர் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள நட்சத்திர தொகுதிகளில் நீலகிரியும் ஒன்று. இது பவானி சாகர், உதகமண்டலம், கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் அவிநாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா, 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
அதற்கு முன்னர் 2014ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றிருந்தார். திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளதால், இந்த முறை வெற்றி யாருக்கு என்கிற எதிர்பார்ப்பு தீவிரமடைந்துள்ளது. அதேபோல, இந்த முறை ஆ.ராசா மீண்டும் திமுக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார்.
அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்செல்வன் களமிறக்கப்பட்டிருந்தாலும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல். முருகன் போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் இவர் மத்தியப் பிரதேசத்திலிருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே, திமுக வேட்பாளர் ஆ.ராசாவை பார்த்து பின்வாங்கிவிட்டார் என்று பேசப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அவர் திடீரென லோக்சபா தேர்தலில் களமிறங்கியது அரசியலில் விவாதங்களை கிளப்பியது.
எனவே இந்த தொகுதியில் திமுக vs பாஜக vs அதிமுக என போட்டி நிலவுகிறது. அரசியல் பிரமுகர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில், இன்று காலை குன்னூர் மோர்ஸ் கார்டன் பகுதியில் உள்ள மசூதியில் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களிடம் பிரமுகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
-
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications