பார்த்து 37 வருஷமாச்சு.. சுப்பிரமணி கையில் சிக்கிய "குயில்".. ஊட்டியில் ஒரு ஆச்சர்ய நிகழ்வு
நீலகிரியில் அரியவகை பறவை இனம் தென்பட்டுள்ளது
ஊட்டி: சுப்பிரமணி செய்த வேலையால், பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.. அப்படி ஒரு நல்ல காரியத்தை செய்துள்ளார் ஊட்டி சுப்பிரமணி!
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் கேத்தி என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வரும் காய்கறி வியாபாரி சுப்பிரமணி.. இவரது நிலத்துக்கு பக்கத்தில் ஒரு கேரட் தோட்டம் இருக்கிறது.. அங்கு ஒரு பறவை இருப்பதையும், அது பறக்க முடியாமல் தவிப்பதையும் பார்த்தார்.

அதனால், அதை காப்பாற்ற அருகில் சென்றால், அந்த பறவையின் உடம்பில் ஒரு காயமும் இல்லை. ஆனால், பறவையை பார்ப்பதற்கே ஒரு தினுசாக இருந்தது... இதற்கு முன்பு அப்படி ஒரு பறவையை சுப்பிரமணி பார்த்ததே இல்லை.. அதனால், செல்போனில் ஒரு போட்டோ எடுத்து கொண்டு அந்த பறவையும் பாதுகாப்பாக விடுவித்துவிட்டார்.
பிறகு அந்த போட்டோவை நண்பர்களின் உதவியுடன் பறவையியல் ஆய்வாளர்களுக்கு அனுப்பிவைத்தார்.. அப்போதுதான் ஆய்வாளர்கள் அந்த பறவையை பார்த்து அதிசயித்து போனார்களாம்.. அது குயில் இனத்தை சேர்ந்த சிறு பறவையாம்.. இப்படி ஒரு பறவை நம் தமிழ்நாட்டில் 9தான் இருக்கிறதாம்.. அதுகூட 37 வருஷமாக இந்த பறவையை காணோம் என்கிறார்கள்.
37 வருஷம் கழித்து இப்போதுதான் சுப்பிரமணி வாயிலாக, இந்த பறவை தென்பட்டுள்ளது... இதுபோன்ற பறவை ஜம்மு-காஷ்மீர், இமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அஸ்ஸாம் போன்ற பகுதிகளில்தான் இருக்கும்.. இவைகளை போன்றே நீலகிரியும் குளிர்பிரதேசம்தான் என்றாலும், இங்கு எப்படி இந்த பறவை வந்தது என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
ஒருவேளை வலசை போகும்போது, இப்படி வந்திருக்கலாம் என்கிறார்கள்.. எப்படியோ, காக்கா, பூனையிடம் இருந்து காப்பாற்றி மீட்டதுடன், இப்படி ஒரு குருவி பற்றியும் ஆராய்ச்சியாளருக்கு தகவல் தந்துவிட்டார் சுப்பிரமணி!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications