’புது வெள்ளை மழை பொழிகிறது’ ஊட்டியில் கடும் குளிர்.. உறைபனியால் சுற்றுலா பயணிகள் திண்டாட்டம்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகிறது. வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியஸாக பதிவானதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உறைபனி காலம் தொடங்கியுள்ளதால் உறைபனியால் ஊட்டியின் பல்வேறு பகுதிகள் காஷ்மீர் போல் காட்சியளிக்கின்றன. உதகையிலும் சுற்றுலா வந்த பயணிகள் தங்கும் விடுதியை விட்டு வெளியே வராமல் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
தமிழகத்தில் மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் இடம் ஊட்டி. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஊட்டி தமிழகத்தில் சிறந்த கோடைவாசஸ்தலமாக உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 7,347 அடி உயரத்தில் உள்ள ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் உறைபனி ஏற்படும். நீர்பனி தொடங்கிய அடுத்த ஒரு சில வாரங்களில் உறைபனி தொடங்கும்.

ஊட்டியில் உறைபனி
இந்த ஆண்டு கடந்த நவம்பர் மாதமே நீர்பனி தொடங்கிய நிலையில், மழைப்பொழிவு இருந்ததால் உறைபனி ஏற்படுவது கொஞ்சம் தாமதம் ஆனது. எப்போதும் ஊட்டியில்தான் உறைபனி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஊட்டியை அடுத்த மஞ்சூர் மற்றும் குன்னூர் பகுதிகளில் உறைபனி தொடங்கியது. நேற்று முன்தினம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில இடங்களில் உறைபனி தொடங்கியது.
தாமதமாக தொடங்கினாலும் கடும் குளிர் நிலவியது. அரசு தாவரவியல் பூங்காவில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் 2 டிகிரி செல்சியஸ் ஆகவும், காந்தல் மற்றும் தலைக்குந்தா பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் ஆகவும், மஞ்சூரை அடுத்த அவலாஞ்சி பகுதியில் மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவானது.

வெண்போர்வை போர்த்தியது போல
இதன் காரணமாக ஊட்டி நகரில் குதிரை பந்தய மைதானம், காந்தல், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவியது. காஷ்மீரில் காணப்படுவது போல பனி உறைந்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் இதமான தட்வெப்ப நிலையை ரசித்தனர். நிறுத்திவைக்கப்பட்ட கார்களில் பனி உறைந்தன. புல்வெளிகளில் வெண்போர்வை போர்த்தியது போல எங்கும் வெண்மையாக காட்சியளித்தது.
இயல்பு வாழ்க்கை முடங்கியது
கார்கள் மீது விழுந்திருந்த உறைபனி வெள்ளை பஞ்சுகள் போல் காணப்பட்டது. இருசக்கர வாகன இருக்கைகள் மீதும் உறைபனி நிறைந்து இருந்தது. குளிர் பாதிப்பை சமாளிக்க பொதுமக்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். கடும் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் நிலவும் கடும் குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியுள்ள ஹோட்டல்களிலேயே முடங்கியுள்ளனர்.

இதனால் காலையில் குளிரை சமாளிக்க ஸ்வொட்டர்கள் விற்பனைக்காக சாலையோரம் வைத்து இருந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். கடைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. காலை 10 மணிக்கு மேல் உறைபனியின் தாக்கம் குறைந்தவுடன்தான் பணிகளை தொடர முடிவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications