தமிழ்நாடு அரசு எதிர்ப்பை மீறி ஊட்டியில் இன்று பல்கலை. துணைவேந்தர்களுடன் ஆளுநர் ரவி ஆலோசனை!
நீலகிரி: தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி ஊட்டியில் இன்று பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் வேந்தர் ஆளுநர் என்பதால் தமிழ்நாடு அரசை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார் ஆளுநர் ரவி என்பது அரசின் குற்றச்சாட்டு. பல்கலைக் கழக விவகாரங்களில் ஆளுநரின் இந்த போக்கை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.

ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ரவி, தொடர்ந்து பல்கலை கழக விவகாரங்களில் இயங்கி வருகிறார். இந்த நிலையில் ஊட்டியில் இன்று தமிழ்நாடு அனைத்து பல்கலைக் கழக துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இத்தகைய ஆளுநரின் கூட்டத்துக்கும் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவிக்கையில், புதிய கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வரும் 5ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார். மாநில அரசை ஆலோசிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் தன்னிச்சையாக செய்லபடுகிறார். ஆளுநர் உடனான ஆலோசனையில் பங்கேற்பது துணைவேந்தர்களின் சொந்த விருப்பம். தேசிய கல்வி கொள்கையின் சிறப்பம்சங்களையும் மாநில கொள்கையில் கொண்டு வருவோம் என தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு ஆளுநர் இன்று நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதிக்க இருக்கிறார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications