உறைந்து போன குன்னூர்.. மனைவி, மகள், மகனை கொடூரமாக கொன்ற அசோக் பகத்.. பரபரப்பு கடிதம்!
ஊட்டி: குன்னூரில் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளி, தனது மனைவி, மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொலக்கம்பை என்னும் கிராமம்.
இதன் அருகேயுள்ள கிரேக்மோர் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

உறைய வைத்த சம்பவம்
இந்த பகுதியில், இன்று நடைபெற்ற ஒரு கொடூர சம்பவம், குளிரையும் தாண்டி, மக்களை அப்படியே உறைய வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்படி என்ன நடந்தது? ஏன் இந்த கொடூரம் நடந்தது என்று தெரியுமா. இதோ அந்த தகவல்கள்.

குடும்பத்தோடு வேலை
கிரேக்மோர் பகுதியில் உள்ள, 12 வது லைன் குடியிருப்பு பகுதியில் அசோக் பகத், அவரது மனைவி சுமதி குமாரி , 8 வயதுடைய மகன் அபே மற்றும் 4 வயது மகளான ரேஷ்மா ஆகியோர் இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். கணவரும், மனைவியும் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

கழுத்தறுத்து, தண்ணீரில் மூழ்கடித்து
இந்நிலையில் அசோக் பகத் தனது மனைவியையும், மகனையும் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். பிறகு மகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். இப்படி கொடூரம் புரிந்த அசோக் பகத், பிறகு அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஹிந்தி கடிதம்
மேலும், இவர் ஹிந்தி மொழியில் கடிதம் எழுதி, மனைவியின் சடலத்தின் மீது வைத்துள்ளார். தகவல் அறிந்து விரைந்த போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் போலீசார் குவிக்கப்பட்டதுடன், பரபரப்பு நிலவி வருகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications