Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைக்கேறிய உல்லாசம்.. படுக்கையில் கிறங்கிய "விருந்தாளி".. நீலகிரி ஊட்டியில் மூச்சுமுட்டிய "மஷ்ரூம்"

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதியை கண்டு, நீலகிரி மாவட்டமே கதிகலங்கி போயிருக்கிறது.. அதென்ன காளான்?

நீலகிரி மாவட்டம் ஊட்டி பாம்பே கேசில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஆகாஷ்.. 20 வயதாகிறது.. இவரது அப்பா - அம்மா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள்.. அவர்கள் 2 பேருமே தனித்தனியாக வாழ்ந்து வருவதாக தெரிகிறது.

what-happened-in-nilgiris-district-ooty-and-do-you-know-what-are-the-side-effects-of-magic-mushrooms

எனவே, ஆகாஷ் தன்னுடைய பாட்டியுடன் வசித்து வருகிறார். .. பாட்டி வீட்டு பக்கத்தில் வசித்து வருபவர் ரிதி ஏஞ்சல்.. 19 வயதாகிறது.. இவர் ஆகாஷூடன் அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பில் ஒன்றாக படித்தவர்.

மாணவர்கள்: ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் ஏஞ்சலின் வீடு உள்ளது.. பள்ளியில் ஏற்பட்ட இவர்களின் நட்பு தற்போது காதலாக மாறியுள்ளது... ஸ்கூல் முடித்ததுமே, நீலகிரியில் உள்ள ஒரு என்ஜினியரிங் காலேஜில் ஆகாஷ் சேர்ந்தார்.. கோவையில் உள்ள ஒரு நர்சிங் காலேஜில் ஏஞ்சல் சேர்ந்தார்.. ஆளுக்கு ஒருபக்கம் படிப்பை தொடர்ந்தனர்.. ஆனாலும், அடிக்கடி சந்தித்து கொண்டு, காதலை வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில், கடந்த வார இறுதியில் இருவருக்குமே காலேஜ் விடுமுறை வந்துள்ளது.. அதனால், சனிக்கிழமை இருவரும் சந்தித்து கொள்வதென முடிவெடுத்தனர்.. அதன்படி, ஆகாஷை சந்திக்க ஏஞ்சல் கோவையில் இருந்து ஊட்டி பஸ் ஸ்டாண்டுக்கு வந்திறங்கினார்.. அங்கிருந்து ஏஞ்சலை, பைக்கில் ஏற்றிக்கொண்ட ஆகாஷ், நடுவழியில் டாஸ்மாக்கில் மதுபாட்டிலையும் வாங்கி வைத்து கொண்டு கிளம்பினார்..

உல்லாசம்: தன்னுடைய வீட்டுக்கே ஏஞ்சலை அழைத்து சென்றார்.. 2 பேருமே உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.. 2 பேருமே ஆன்லைன் மூலம் சாப்பாடு வரவழைத்து சாப்பிட்டார்கள்.. 2 பேருமே தண்ணி அடித்திருக்கிறார்கள்..

மதுவுக்கு சைட் டிஷ் தேவை என்பதற்காக, மறுபடியும் பைக் எடுத்துக் கொண்டு வெளியில் சென்ற ஆகாஷ், வீட்டுக்கு அருகிலேயே பைன் பாரஸ்ட் பகுதியிலிருந்து "மேஜிக் காளான்" கொண்டு வந்துள்ளார். அதனை மதுவுடன் சேர்த்து 2 பேருமே சாப்பிட்டதாக தெரிகிறது... பிறகு போதை தலைக்கேறிவிடவும், 2 பேருமே நிலைகுலைந்து படுக்கையில் விழுந்துவிட்டனர்.

ஆகாஷ்: மறுநாள் காலையில், போதை தெளிந்து எழுந்த ஆகாஷ், ஏஞ்சல் தூக்கத்திலிருந்து எழாமல் இருப்பதை கண்டார்.. நீண்ட நேரமாகியும் படுக்கையை விட்டு எழாததால், ஏஞ்சலை எழுப்ப முயன்றார்.. ஆனால் ஏஞ்சல் எழவில்லை..

இதனால் பதறிப்போன ஆகாஷ், 108 ஆம்புலன்சுக்கு போன் போட்டு அழைத்துள்ளார்.. அவர்கள் விரைந்து, ஏஞ்சலை பரிசோதித்துவிட்டு, ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.. இதையடுத்து, போலீசாருக்கு விஷயம் தெரிந்து அவர்கள் விரைந்து வந்தனர்.. ஏஞ்சலின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. ஆரம்பத்தில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, பிறகுதான், ஆகாஷை கைது செய்துள்ளனர்.

விசாரணை: இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, ஆகாஷ் போதை காளானை கொண்டு வந்து தந்துள்ளார்.. அதனை 2 பேருமே சாப்பிட்டுள்ளனர். போதை தலைக்கேறி படுத்துள்ளனர். இதில், அந்த பெண் மூச்சுத்திணறி இறந்துள்ளார். நாங்கள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டோம். அங்கு சோதனையிட்டதில் மதுபாட்டில்கள் மற்றும் போதை காளான் இருந்தது தெரிய வந்தது. இதைவைத்து ஆகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

மேஜிக் காளான் என்பதை போதை காளான் என்றும் சொல்வார்கள்.. போதைக்காகவே இது சாப்பிடக்கூடியது.. ஊட்டி பகுதியில் விளைவதால், இதனை பறித்து சாப்பிட்டிருக்கிறார்.. இதை சாப்பிட்டதுமே, போதை உச்சம் தொட்டுள்ளது.. இதுபோன்ற மேஜிக் காளான்களில் அல்கலாய்டு அதாவது உடலை அமைதிப்படுத்தும் மற்றும் உறக்க உணர்வு கொள்ளச் செய்யும் போதைப்பொருள் நிறைந்திருக்கிறதாம்.

விழிப்புணர்வு: மனஅழுத்தம், உடல்வலி போன்றவற்றைக்கு மருந்தாக வெளிநாடுகளில் பயன்படுத்துவார்கள்.. இந்த காளானை சாப்பிட்டால், 8 மணி நேரம் வரை போதை நிற்குமாம்.. அதனை தாண்டி ரத்த ஓட்டம் அதிகரித்து, மாரடைப்பு வரவும் வாய்ப்பு உள்ளது.. கஞ்சாவை போலவே, இந்த காளான்களுக்கும் பக்கவிளைவுகளும் உண்டு.. ஊட்டியை போல கொடைக்கானலிலும் இந்த மேஜிக் காளான்கள் உண்டு.

போதை தரக்கூடியது என்பதால்தான், யூடியூபில் மேஜிக் காளான்களை கண்டறிவது எப்படி? என்று மாணவர்கள் ஆராய்கிறார்களாம். பொதுவாக, நம்முடைய இந்தியாவில் காளான்களுக்கான விழிப்புணர்வு அவ்வளவாக கிடையாது. அந்தவகையில், விஷக்காளான்கள் குறித்த விழிப்புணர்வையும் இங்கு அதிகமாகவே மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இன்று "ஊட்டி ஏஞ்சல்" மூலம் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+