புஸ்ஸாயிடுச்சு.. நீலகிரியில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் காணோமா? அப்ப எடப்பாடிக்கு பக்கத்துல யாரது? ஆஹா
நீலகிரி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம், அதிமுகவுக்குள்ளேயே பேசுபொருளாகி உள்ளது.. என்ன காரணம்?
தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமலில் உள்ளதால், அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டே அனுமதிக்கப்படுகிறது.. நேற்றுகூட, ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வாகனத்தை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

பிரச்சாரம்: திருப்புல்லாணியில் பிரச்சாரம் செய்வதற்காக ஓபிஎஸ் சென்றுகொண்டிருநத்போது, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.. அப்போது, காருக்குள் ஒரு பர்ஸ் இருந்தது.. அந்த பர்ஸையும் திறந்து காட்டுமாறு அதிகாரிகள் சென்னார்கள்..
அப்படித்தான், நேற்று நீலகிரியில் பிரசாரத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியின் காரையும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நீலகிரிக்கு வந்துகொண்டிருந்த எடப்பாடியின் காரை வழிமறித்த பறக்கும் படை அதிகாரிகள், காரில் நீண்ட நேரமாக சோதனை நடத்தினார்கள்.
எடப்பாடி பழனிசாமி: அதுவரை, காரின் முன் சீட்டில், எடப்பாடி பழனிசாமி உட்கார்ந்து கொண்டிருந்தார்.. எடப்பாடியின் காரிலேயே சோதனை போட்டது, அதிமுகவினருக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு பிறகே நீலகிரியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்... இவர் முன்னாள் சபாநாயகரும், அன்னூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தனபாலின் மகன் ஆவார். இவருக்கு ஆதரவாகவே எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை போன்ற மேலாடையை எடப்பாடி பழனிசாமி அணிந்திருந்தார்.
தலைக்கணம்: அதேபோல, எடப்பாடி தன்னுடைய பிரச்சாரத்தில், "நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தலைக்கணம் பிடிச்சவர்.. இந்த நாடே தலைகுனியும் வகையில் ஊழல் செய்த கட்சி திமுக. 2ஜி வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தவர் ஆ.ராசா.. தேர்தல் முடிந்ததுமே பல திமுகவினர் ஜெயிலுக்கு போக போகிறார்கள்" என்றார் எடப்பாடி பழனிசாமி.
வழக்கமாக, வேட்பாளருக்காக முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்யும்போது, பிரச்சார வாகனத்திலேயே வேட்பாளரும் இருப்பார்.. தலைவர்கள் தனக்காக வாக்கு சேகரித்து முடிக்கும்வரை, பிரச்சார வாகனத்தில் கைகூப்பியபடியே நின்று கொண்டிருப்பார்கள் வேட்பாளர்கள்.
லோகேஷ்: ஆனால், நேற்று நீலகிரியில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்தது.. எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் லோகேஷூக்காக பிரச்சாரத்திற்கு வந்தபோது, லோகேஷை காணவில்லை.. அவருக்கு பதிலாக, எடப்பாடியுடன் எஸ்.பி.வேலுமணி மட்டுமே இருந்தார். ஆனால், லோகேஷை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டேயிருந்தார்.
வேட்பாளர் இல்லாமலேயே எடப்பாடி ஓட்டு கேட்கிறாரே என்று பொதுமக்கள் குழம்பினார்கள்.. அதற்கு பிறகுதான், வேட்பாளர் லோகேஷ் கனகராஜ், முன்னால் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தனியாக நின்று வாக்காளர்களுக்கு "வணக்கம்" செலுத்திக்கொண்டிருந்ததை கவனித்தார்கள்.. வேட்பாளரே இல்லாமல் எடப்பாடி பிரச்சாரம் செய்ததும், அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications