கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்? சிபிஐக்கு நீதிபதி கேள்வி!
நீலகிரி: கோடநாடு கொலை கொள்ளை வழக்கை இன்னும் முடிக்காதது ஏன் என்று ஊட்டி அமர்வு நீதிமன்றத்தின் புதிய நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, "சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சந்தேகப்படும்படியான நபர்களின் செல்போன் உரையாடல்கள் குறித்த தரவுகள் தேவைப்படுகின்றன. குஜராத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்தில் இருந்து ஒலி நாடாக்கள் தொடர்பான ஆய்வு முடிவுகள் வர வேண்டியுள்ளன." என சிபிஐ தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அடுத்த சில நாட்களில் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கோடநாடு சம்பவத்தில் காவல்துறை 10 பேரை கைது செய்த நிலையில், தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை, உதகை நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை 500க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று (மார்ச் 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வளையார் மனோஜ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் கனகராஜ் மற்றும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் ஆகியோர் ஆஜராகினர். இன்று காலை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், "இந்த வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?" என சி.பி.சி.ஐ.டி தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த சிபிசிஐடி தரப்பு அதிகாரிகள், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி தரப்புக்கு மாற்றப்பட்டதில் இருந்து தற்போது வரை 269 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, அந்த தகவல்கள் வாக்குமூலங்களாகப் பெறப்பட்டுள்ளன.
மேலும், சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சந்தேகப்படும்படியான நபர்களின் செல்போன் உரையாடல்கள் குறித்த தரவுகள் தேவைப்படுகின்றன. குஜராத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்தில் இருந்து ஒலி நாடாக்கள் தொடர்பான ஆய்வு முடிவுகள் வர வேண்டியுள்ளன. அவை கிடைக்கப்பெற்றதும் வழக்கு அடுத்தக்கட்டத்திற்கு நகரும்" எனத் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள முரளிதரன், இந்த வழக்கை விசாரிக்கும் 9 வது நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications