Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெய் சிலிர்க்கும்.. நொய்டாவில் கட்டிடம் தகர்ப்பு.. அருகிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ.. இதை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

நொய்டா: நொய்டா இரட்டை கோபுர இடிப்பு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இரட்டை கோபுரத்திற்கு மிக அருகில் இருந்து பல வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நொய்டாவில் இருக்கும் இரட்டை கோபுர கட்டிட இன்று தகர்க்கப்பட்டது. இதற்காக 3700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன. வயர்கள் மூலம் எல்லா மாடிகளிலும் வெடிகள் வைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பு மூலம் இந்த தகர்ப்பு செய்யப்பட்டது.

இதன் காரணமாக அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் மிகப்பெரிய அளவிற்கு புகை பரவியது. அந்த பகுதியில் இந்த கட்டிடம் வெடிக்கவைக்கப்படுவதை பார்க்க பல ஆயிரம் பேர் குவிந்தனர்.

தரைமட்டம்

தரைமட்டம்

வெறும் 9 நொடியில் மொத்த கட்டிடமும் தரைமட்டமானது. நொய்டாவில் சுரெபிடெக் எமெரெல்ட் நிறுவனம் மூலம் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும் இது. 2004ல் இந்த கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.முதலில் 14 டவர்கள், 9 மாடிகள் மட்டுமே இருக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் 2012ல் இதை 40 மாடிகளாக கட்டலாம், இரண்டு டவர்கள் கட்டலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த விதி மீறல் காரணமாக அலஹாபாத் நீதிமன்றமும், பின்னர் உச்ச நீதிமன்றமும் இந்த கட்டிடத்தை தகர்க்க உத்தரவிட்டது.

திருவிழா

திருவிழா

இதையடுத்து இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நொய்டா கட்டிடம் தகர்க்கப்பட்டது. இந்த கட்டிட தகர்ப்பு தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்த சம்பவத்தை படம் பிடிக்க டெல்லி மீடியாக்கள் பல நொய்டா பகுதியில் குவிந்தன. அதேபோல் அங்கு மக்கள் பலரும் கேமராக்களுடன் குவிந்தனர். பல்வேறு கோணங்களில் இந்த வீடியோவை எடுக்க மக்கள் பலரும், மீடியாக்களும் குவிந்தன. இதனால் அந்த பகுதியே திருவிழா போல மாறியது.

டிராபிக்

டிராபிக்

கார்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் பலரும் அங்கு வந்து குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான டிராபிக் ஜாமும் ஆனது. அங்கு போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இருந்தாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை. இதனால் மக்கள் இதை சிறந்த பொழுது போக்கு சம்பவமாக மாற்றிக்கொண்டனர். பலர் குடும்பத்தோடு வந்து இந்த கட்டிடம் இடிக்கப்படுவதை பார்க்க குவிந்தனர்.

வீடியோக்கள்

வீடியோக்கள்

தற்போது இந்த இரட்டை கோபுரத்திற்கு மிக அருகில் இருந்து பல வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடம் இடிக்கப்பட்ட போது அருகில் இருந்த மக்கள் பலர் அதை வாயை பிளந்தபடி பார்த்தனர். அதோடு கட்டிடம் இடிந்தது ஓ என்று கோஷம் எழுப்பி கொண்டாடினார்கள். இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்டிட இடிப்பு இது என்பதால் மக்கள் திருவிழா போல இதை இன்று கொண்டாடி உள்ளனர். இதன் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+