வாய்ப்பை தவறவிடாதீர்கள்: இந்திய அரசியல் சட்டம் அறிய வேண்டுமா?- இதோ மத்திய அரசின் இலவச ஆன்லைன் கோர்ஸ்
நேஷனல் அகாடமி ஆஃப் லீகல் ஸ்டடீஸ் & ரிசர்ச் (NALSAR) உடன் இணைந்து, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை சார்பில் இந்திய அரசியலமைப்பு குறித்த ஆன்லைன் பாடத்தை அமைச்சர் கிரண் ரிஜுஜு, இன்று டெல்லியில் தொடங்குகிறார். சட்டப் பல்கலைக்கழகம். 'அரசியலமைப்பு தினத்தை' முன்னிட்டு இந்த பாட அமைப்பு தொடங்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு Constitution of India )
இந்திய அரசியலமைப்பு Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது.
பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது. இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், அதிகாரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிகப்பெரிய அரசியலமைப்பாகும்.

குடியரசு நாள் உருவானது இப்படித்தான்
இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா ஓர் ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. இந்த நாளைத்தான் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம்.

மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் புதிய முயற்சி
நேஷனல் அகாடமி ஆஃப் லீகல் ஸ்டடீஸ் & ரிசர்ச் (NALSAR) உடன் இணைந்து, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இந்திய அரசியலமைப்பு குறித்த ஆன்லைன் பாடத்தை இன்று தொடங்குகிறது. சட்டப் பல்கலைக்கழகம். 'அரசியலமைப்பு தினத்தை' முன்னிட்டு இந்த பாட திட்டம் தொடங்கப்படுகிறது. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இதை தொடங்கி வைக்கிறார்.

அனைத்தும் இலவசம், ஆனலைன் வகுப்பு சான்றிதழுடன்
இந்தப் படிப்புக்கான பதிவு இலவசம். இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பாராட்டுச் சான்றிதழ் அல்லது தகுதிச் சான்றிதழைப் பெற விரும்புவோருக்கு டோக்கன் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.
"ஆன்லைன் பாடமுறையின் சாரத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் முன்னணி சட்டப் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்மட்டச் செயல்பாட்டாளர்கள், அரசியலமைப்பைத் தெரிந்துக்கொள்ள விரும்புவோர் ஆகியோரின் ஆர்வம் மிகுந்த மற்றும் உற்சாகமான பங்கேற்பையும் இந்த வகுப்புகளில் காணலாம் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த வகுப்பில் பதிவுசெய்த பிறகு, வேட்பாளர்கள் அரசியலமைப்பின் உரை மற்றும் முன்னணி வழக்குகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம், அரசியலமைப்பில் இணைக்கப்பட்டுள்ள அடிப்படைக் கொள்கைத் குறித்து பாடங்களை காணலாம், வரலாற்று பரிணாமத்தை ஆய்வு செய்யலாம் மற்றும் 15 கருத்தியல் வீடியோக்களின் தொடர் மூலம் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியலமைப்பு பயணத்தைப் புரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது
ஆன்லைன் படிப்புகளை legalaffairs.nalsar.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். அதில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடதிட்டம் போல் அறிமுகமாவதால் இதன் கால அளவு, தேர்வு உண்டா, எத்தனை மொழிகளில் பாடங்கள் இருக்கும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. மாலையில் திட்டம் தொடங்கப்பட்டப்பின் முழு தகவலும் வெளியாகும் என தெரிகிறது.
பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ள NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் பைசான் முஸ்தபா குறித்த குறிப்பு:
ஹைதராபாத்தில் உள்ள NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார். பேராசிரியர். முஸ்தபா தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் மூத்த துணைவேந்தர் மட்டுமல்ல, ஒரு பிரபலமான அரசியலமைப்பு சட்ட ஆசிரியரும் ஆவார். அவர் காமன்வெல்த் உதவித்தொகை மற்றும் ஃபுல்பிரைட் பெல்லோஷிப் இரண்டையும் பெற்றவர்.

உரிமை
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தலைவராக இரண்டு முறை பணியாற்றினார். இவர் ஒரிசாவின் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் துணைவேந்தர் ஆவார். எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார் மற்றும் 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை பங்களித்துள்ளார். இந்திய உச்ச நீதிமன்றமும் இறப்பதற்கான உரிமை மற்றும் சபரிமலை மீதான தனது தீர்ப்புகளில் இவரை மேற்கோள் காட்டியுள்ளது. தற்போதைய சட்ட சிக்கல்கள் குறித்து முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதுகிறார்.












Click it and Unblock the Notifications