‛பசிக்கும்ல’.. அதுக்காக இப்படியா? பிரான்ஸ் வன்முறைக்கு நடுவே உலகையே உலுக்கிய இளைஞர்! என்ன செய்தார்?
பாரீஸ்: பிரான்சில் போக்குவரத்து விதி மீறியதாக கூறி 17 வயது சிறுவனை போலீசார் சுட்டு கொன்றதால் அங்கு கடும் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில் தான் ஒரு பக்கம் பாதுகாப்பு படையினர், இன்னொரு பக்கம் பொதுமக்கள் நின்று கல்வீச்சு நடத்திய நிலையில் இளைஞர் ஒருவர் எந்த பயமுமின்றி ஹாயாக செய்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த உலகையே உலுக்கி உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகர் அருகே நான்டர் எனும் இடம் உள்ளது. இங்கு அல்ஜீரிய மற்றும் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த 17 வயது நிரம்பிய நேல் என்ற சிறுவன் சென்றான். அப்போது அவன் போக்குவரத்து விதிகளை மீறி நடந்து கொண்டதாக கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் சிறுவன் நேல் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேல் இறந்தான்.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. போலீசாருக்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். நாட்டின் பல இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் என்பது வன்முறையாக மாறியது. பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்கள், போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், போலீசார், பாதுகாப்பு படையினர் இடையே கடும் மோதல் உருவாகி உள்ளது.
இதனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தனது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தீவிர ஆலோசனை நடத்திய நிலையில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இருப்பினும் வன்முறை மட்டும் கட்டுக்குள் வரவில்லை. இரவு, பகலாக அங்கு மோதல் நடந்து வருகிறது.
இந்த வன்முறையில் 100க்கும் அதிகமான போலீசார் காயமடைந்துள்ளனர். மேலும் 600க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரீஸ் மற்றும் அதனை சுற்றிய முக்கிய இடங்களில் போலீசார், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே தான் இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர வைத்துள்ளது.
இந்த வீடியோ என்பது பிரான்சின் நான்டெர்ரே பகுதியில் போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே நடந்த மோதலின்போது எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருபகுதியில் பொதுமக்கள் நின்று போலீசாரை நோக்கி கற்களை வீசுகின்றனர். மறுபுறம் போலீசார் தற்காப்புக்கான தடுப்புகளை பயன்படுத்தி தங்களை பாதுகாத்து கொள்வதோடு, பொதுமக்களை நோக்கி கண்எரிச்சலை தரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர்.
இப்படியாக மோதல் நடந்து வரும் சூழல் போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு இடையே தனியாக ஒரு இளைஞர் அமர்ந்து சாண்ட்விச் சாப்பிடுகிறார். வன்முறையில் இருதரப்பினரும் கூச்சலிட்டபடி கடுமையாக மோதிக்கொள்ளும் நிலையில் அந்த இளைஞர் யாரையும் கண்டுக்கொள்ளாமல் அமைதியாக அமர்ந்து கொண்டு சாண்ட்விச் சுவைக்கிறார். இந்த வீடியோ தான் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications