ஹோம் ஒர்க் எழுதவில்லை.. துடைப்பக்கட்டையால் அடித்த சித்தி.. ஹார்ட் அட்டாக்கில் சிறுவன் பரிதாபப் பலி!
வீட்டுப் பாடம் எழுதாத சிறுவனை அடித்துக் கொன்றதாக குடும்பத்தார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரீஸ்: பிரான்சில் வீட்டுப் பாடம் எழுதாத சிறுவனை அடித்துக் கொலை செய்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் முல்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் வீட்டுப் பாடம் செய்ய அடம் பிடித்துள்ளான். வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவன் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவனுடைய சித்தி, அவனை வீடு கூட்டும் துடைப்பத்தின் பின்புறக் கட்டையால் அடித்துள்ளார். இதில் கடுமையாக காயமடைந்த அச்சிறுவன் மயக்கமடைந்தான்.

பதறிப் போன குடும்பத்தார் உடனடியாக அவனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான். அவனது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறுவன் தாக்கப்பட்டதில் மாரடைப்பு ஏற்பட்டு அவன் மரணம் அடைந்தது தெரியவந்தது.
அங்கு அவனை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அச்சிறுவன் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சிறுவனை அடித்துக் கொன்றதாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அடித்துக் கொன்றதாக அவனது சித்தியையும், அதற்கு உடந்தையாக இருந்ததாக அவனது சகோதரர் மற்றும் சகோதரியையும் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தின் போது, உயிரிழந்த சிறுவனின் தாய் சம்பவ இடத்தில் இல்லை. அவர் தொழில் ரீதியான சுற்றுலா சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, சிறுவனின் மீது அக்கறையில்லாமல் இருந்ததற்காக அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications