பிரான்சில் ஒலித்த பொங்கலோ பொங்கல்.. சிறப்பாக நடந்த தமிழ்ச் சங்கத்தின் 53ஆவது பொங்கல் விழா
பாரிஸ்: பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 53ஆவது பொங்கல் விழா பிரான்சில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பொங்கல் விழா என்பது தமிழர் திருவிழா. தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் வேறுபாடுகள் கடந்து கொண்டாடும் பண்டிகை ஆகும். தமிழ்நாட்டு மண்ணில் இருந்து வேறு மண்ணிற்கு சென்றாலும் தமிழர்களின் பாரம்பரியம் மறக்காது மக்கள் கொண்டாடும் பண்டிகை ஆகும் இது.

அந்த வகையில் பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 53ஆவது பொங்கல் விழா பிரான்சில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பிரான்சின் தலைநகரம் பாரீசுக்கு அடுத்துள்ள மலகோப் (Malakoff) நகரத்தில் பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 53 ஆவது ஆண்டு பொங்கல் விழா 15.01.2023 அன்று நடைபெற்றது. பிரான்ஸ் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் பா.தசரதன் அனைவரையும் வரவேற்றார். பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் கோகுலன் கருணாகரன் விழாவிற்கு தலைமை தாங்கினார், பிரான்ஸ் தமிழ் சங்க துணைத்தலைவர் தளிஞ்சன் முருகையன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் மலகோப் நகர மன்ற தாய் ஜக்குலின் பெலோம் உரையாற்றினார். மேலும், திரான்சி நகர மன்ற உறுப்பினர் அலன் ஆனந்தன், பிரபாகரன், சித்தாரா அமைப்பின் தலைவர் தம்புசாமி கிருஷ்ணராஜ், பாவலர் அருணா செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு உரையாற்றினர். தளிஞ்சன் முருகையன் பொங்கலை பற்றி சிறப்புரையாற்றினார். பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் பிரான்சில் வாழும் தமிழ் மக்களும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக, பிரான்ஸ் தமிழ்ச்சங்கத்தின் துணைப்பொருளாளர் எலிசபெத் அமல்ராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.




-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications