டெலிகிராம் சிஇஓவுக்கு ஜாமீன்.. ஆனால் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது! பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு
பாரீஸ்: டெலிகிராம் செயலியின் சிஇஓ பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டிருந்தது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரான்ஸ் அரசு கூறியிருக்கிறது.
பாவெல் துரோவ் ரஷ்யாவில் பிறந்தவராவார். இருப்பினும் இவர் தனது குழந்தை பருவத்தை பெரும்பாலும் இத்தாலியில்தான் கழித்திருக்கிறார். தற்போது இவரிடம், ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், கரீபியன் தீவு நாடான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகியவற்றின் குடியுரிமை இருக்கிறது. ரஷ்யாவில் டெலிகிராமின் அலுவலகத்தை துரோவ் வைத்து நடத்தி வந்தபோது ஒரு பஞ்சாயத்து ஏற்பட்டது.

அதாவது கடந்த 2010ம் ஆண்டு, உக்ரைனில் டெலிகிராம் பயன்படுத்துபவர்கள், எந்த செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள்? என்கிற விவரங்களை ரஷ்யா கேட்டு ஏழரையை கூட்டியது. ஆனால், பயனாளர்களின் பிரைவசி ரொம்ப முக்கியம். எனவே, எங்களால் தகவல்களை தர முடியாது.. என துரோவ் வெளிப்படையாக மறுத்துவிட்டார். மட்டுமல்லாது, உள்ளூரில் இனி கடையை வைத்திருந்தால் நம்மை காலி செய்து விடுவார்கள் என்று உணர்ந்த அவர், அமெரிக்காவுக்கு ஜம்ப்பாகிவிட்டார்.
அமெரிக்கா மட்டும் என்ன உத்தம புத்திரரா? கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி, டிரம்ப் ஆதரவாளர்கள் கேப்பிட்டல் ஹாலுக்குள் நடத்திய கலவரம் டெலிகிராமில்தான் திட்டமிட்டதாக கூறி, குற்றம் சாட்டப்பட்ட அந்த தனிநபர் தகவல்களை தங்களுக்கு தருமாறு கேட்டது ஜோ பைடன் நிர்வாகம். ஒருமுறை தகவல்களை கொடுத்து விட்டால், எல்லா முறையும் இதையே மேற்கோள் காட்டி தகவல்களை பெற, பல்வேறு நாடுகளின் அரசுகள் முயற்சிக்கும் என்பதை உணர்ந்த துரோவ், அமெரிக்க அரசின் கோரிக்கையை நிராகரித்து அங்கிருந்து வெளியேறி விட்டார். தற்போது துபாயில் டெலிகிராம் தலைமை அலுவலகத்தை வைத்து நடத்தி வருகிறார்.
இப்படி இருக்கையில் ஆக.24ம் தேதி அவர், பிரான்ஸ் வந்திருந்தபோது, அந்நாட்டின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பண மோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆபாச பதிவுகள் போன்றவற்றிற்கு டெலிகிராம் செயலி காரணமாக இருக்கிறது என, ஏற்கெனவே பிரான்ஸ் அரசு அவர் மீது குற்றம் சுமத்தி இருந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் துரோவ் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த கைது நடவடிக்கைக்கு எலான் மஸ்க் உள்ளிட்ட பெரும் புள்ளிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேபோல ரஷ்யாவும், ஐக்கிய அரபு அமீரகமும் துரோவ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, அவரை மீட்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
இப்படி இருக்கையில், துரோவ் தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவரது வழக்கறிஞர் இதனை உறுதி செய்திருக்கிறார். துரோவ் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications