இரண்டு உலக போர்கள்.. கொரோனா பாதிப்பு.. அனைத்தையும் கடந்து 117ஆவது பிறந்தநாள் கொண்டாடிய கன்னியாஸ்திரி
பாரிஸ்: கொரோனாவில் இருந்து குணமடைந்த ஐரோப்பாவின் மிகவும் வயதான நபரான பிரெஞ்சு கன்னியாஸ்திரி ஒருவர், தனது 117ஆவது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் கன்னியாஸ்திரி ஆண்ட்ரே. 1904ஆம் ஆண்டு பிறந்த இவர் தான், தற்போது ஐரோப்பியாவிலேயே மிகவும் வயதான நபர் ஆவார். உலகை உலுக்கிய இரண்டு உலகப் போர்களையும் இவர் தனது வாழ்நாளில் பார்த்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்தப் பகுதியில் வசிக்கும் 81 நபர்களுடன் இவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ஒரு மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் அவர் பூரண குணமடைந்தார்.
இது குறித்து அவர் கன்னியாஸ்திரி ஆண்ட்ரே கூறுகையில், "எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். ஆனால் எனக்கு எதுவும் பெரிய மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. உடல் மட்டும் சற்று பலவீனமாக இருந்தது" என்று தெரிவித்தார்.
தனது வாழ்நாளில் இரண்டு உலகப் போர்களைக் கண்ட கன்னியாஸ்திரி ஆண்ட்ரே. இன்று தனது 117ஆவது பிறந்த நாளை சிறிய கேக் வெட்டி கொண்டாடினர். தற்போது அவர் வீல்சேரிலேயே உள்ளதாகவும் இருப்பினும், அவரது நம்பிக்கை துளியும் குறையவில்லை என்றும் காப்பகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆண்ட்ரே தனது 26 வயதில் கத்தோலிக்க கிறிஸ்துவராக மாறினார். அதன் பின்னர் அவர் தனது 47ஆவது வயதில் கன்னியாஸ்திரினார். அப்போது முதல் கிருத்துவ மத பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார். உலகில் தற்போது வாழும் இரண்டாவது மிகவும் வயதான நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications