திடீரென கடலில் லேண்டிங் ஆன விமானம்.. உறைந்து போன சுற்றுலா பயணிகள்.. என்னாச்சு
பாரீஸ்: விமானங்கள் தொழில் நுட்ப கோளாறு அல்லது வேறு ஏதேனும் எமர்ஜென்சி கால கட்டங்களில் அவசரமாக அருகில் உள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்படும். சில சமயங்களில் சிறிய ரக விமானங்கள் சாலைகளில் கூட தரையிறக்கப்படுகின்றன. ஆனால், பிரான்ஸ் நாட்டில் விமானம் கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த வினோத சம்பவம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
விமானங்கள் அவசர காலங்களில் திடீரென அருகில் உள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்படுவது வழக்கம். அடிக்கடி விமான பயணங்கள் மேற்கொள்பவர்கள் எப்போதாவது இப்படி ஒரு அனுபவத்தை சந்தித்து இருக்கலாம். அது மட்டும் இன்றி செய்திகளில் கூட எங்காவது ஒரு இடத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை கேள்வி பட்டு இருக்கும்.

தொழில் நுட்ப கோளாறு , பயணிகள் யாருக்காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ திடீரென விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களில் அவசரமாக தரையிறக்கப்படும். இந்த மாதிரியான சூழல்களில் விமான கட்டுப்பாடு நிலையங்களை தொடர்பு கொண்டு பக்கத்தில் இருக்கும் விமான நிலையங்களில் தரையிறக்குவதற்கு தான் விமானிகள் முன்னுரிமை கொடுப்பார்கள்.
சில நெருக்கடியான தருணங்களில் சிறிய ரக தனி நபர் விமானங்கள் சாலைகளில் கூட தரையிறக்கப்பட்டு இருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அடிக்கடி இத்தகைய நிகழ்வுகளை கேள்வி பட்டு இருப்போம். ஆனால் பிரான்ஸ் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பிரான்ஸ் நாட்டில் பிரெஜஸ் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் 3 பேருடன் Cessna 177 என்ற சிறிய ரக விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்க வேண்டியிருந்துள்ளது. கடலோரப் பகுதிகளில் விமானம் சென்று கொண்டிருந்ததால் விமானத்தை அங்கேயே தரையிறக்க விமானி முடிவு செய்து இருக்கிறார்.

ஆனால், விடுமுறை தினத்தை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு திரண்டு இருந்தனர். இதனால், கடலில் 600 மீட்டர் தொலைவில் கடலில் தரையிறங்கியுள்ளது. உடனே தயாராக இருந்த தீ அணைப்பு வீரர்கள் விமானத்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் பயணியை பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக தீ அணைப்பு வீரர்கள் கூறுகையில், இது போன்ற அசாத்திய நேரங்களில் தொழில் நுட்ப திறமையோடு, கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும்.
அப்படியான நேரத்தில் மட்டுமே இது சாத்தியம் என்று கூறியுள்ளார். இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் இது பற்றி கூறுகையில், "எந்த காயங்களும் எங்களுக்கு ஏற்படவில்லை. எனினும், விமானம் பயங்கரமாக குலுங்கியது" என்றனர். பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட போதிலும் விமானம் கடலில் மூழ்கிவிட்டதாம் . எனினும், மாசு எதுவும் ஏற்பட்டது இதுவரை கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications