டெலிகிராம் சி.இ.ஓ பாவெல் துரோவ் பிரான்ஸில் கைது.. பரபரப்பைக் கிளப்பிய சம்பவம்! என்ன காரணம்?
பாரிஸ்: டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ பாவெல் துரோவ், பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார். இணையத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதற்கு டெலிகிராம் செயலி அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும், அதனை டெலிகிராம் தடையின்றி அனுமதிப்பதாகவும், கூறி போர்கெட் விமான நிலையத்தில் பிரான்ஸ் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக அளவில் மிகவும் பிரபலமான செய்தி பரிமாற்ற செயலியாக உள்ளது டெலிகிராம். இந்த நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சில் பாரீசுக்கு அருகே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் வைத்து அவரை அந்நாட்டு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

39 வயதான பாவெல் துரோவ், பிரைவேட் ஜெட்டில் அஜர்பைஜான் நோக்கி சென்ற நிலையில், பிரான்ஸ் நாட்டு நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு பிரான்ஸ் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
ரஷ்யாவில் பிறந்த பாவெல் துரோவ் தற்போது துபாயில் வசிக்கிறார். அங்கு டெலிகிராம் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. பாவெல் துரோவ், பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரட்டை குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
பாவெல் துரோவ் மற்றும் அவரது சகோதரர் நிகோலாய் ஆகியோர் கடந்த 2013 இல் செய்தி பரிமாற்ற செயலியான டெலிகிராமை நிறுவினர். டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் சுமார் 900 மில்லியன் ஆக்டிவ் யூசர்களை கொண்டுள்ளது.
டெலிகிராம், பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்தன. இணையத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதற்கு டெலிகிராம் செயலி அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும், அதனை டெலிகிராம் தடையின்றி அனுமதிப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், பயனர்களின் தகவல் விவரங்களை அரசுக்கு தெரியாமல் பாதுகாப்பதாகவும் டெலிகிராம் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் தான் தீவிரவாத இயக்கங்களுக்கு துணைபோவது, போதைப் பொருள் விநியோகம், மோசடி, சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அனுமதிப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications