டெலிகிராம் சிஇஓ-க்கு 20 ஆண்டு சிறை? பாவெல் துரோவ் கைதுக்கு உண்மையில் என்ன காரணம்! பரபர தகவல்
பாரீஸ்: டெலிகிராம் செயலியின் சிஇஓ 39 வயதான பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அவர் எதற்காகக் கைது செய்யப்பட்டார்.. அவருக்கு எத்தனை ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகில் இப்போதும் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலி என்றால் அது வாட்ஸ்அப் தான்.. அதேநேரம் வாட்ஸ்அப் செயலியில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.

எனவே, மற்றொரு தரப்பினர் டெலிகிராம் செயலியைத் தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். டெலிகிராம் செயலியின் பயன்பாடு இப்போது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
கைது: இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் டெலிகிராம் செயலியின் சிஇஓ 39 வயதான பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அவர் எதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
எதற்காக கைது: டெலிகிராம் செயலியின் மூலம் நடக்கும் குற்றச் செயல்களைத் தடுக்க தவறியதாக ரஷ்ய நாட்டை சேர்ந்த பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளார். டெலிகிராம் செயலியில் நடக்கும் குற்றச் செயல்களைத் தடுக்க இவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இவரது கைதுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த கைது குறித்து விரைவில் டெலிகிராம் செயலி விளக்கம் ஒன்றை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெலிகிராம் செயலியில் மாடரேட்டர் எனப்படும் கண்காணிக்கும் நபர்கள் இல்லாத இல்லை. டெலிகிராம் செயலியில் குற்றச் செயல்கள் தடையின்றி நடக்க இதுவே காரணம் என்று பிரான்ஸ் போலீசார் கருதுகின்றனர். பாவெல் துரோவ் அஜர்பைஜானில் இருந்து தனது பிரைவேட் ஜெட் விமானத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு வந்த போது இந்த கைது நடந்துள்ளது.
இணையதளங்களில் சிறார்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு ஆஃப்மின் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த ஆஃப்மின் அமைப்பு ஏற்கனவே பாவெல் துரோவ்வுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து இருந்த நிலையில், இந்த கைது நடந்துள்ளது. மோசடி, போதைப்பொருள் கடத்தல், சைபர் குற்றம், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது உள்ளிட்ட குற்றங்கள் குறித்து இந்த ஆஃப்மின் அமைப்பு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா விமர்சனம்: டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் ரஷ்யாவைச் சேர்ந்தவர். அவரை பிரான்ஸ் கைது செய்துள்ள நிலையில், ரஷ்யா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாவெல் துரோவ் கைது குறித்துத் தெளிவான தகவல்கள் தங்களிடம் இல்லை என்றும் இது குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள பிரான்ஸ் நாட்டில் உள்ள ரஷ்யத் தூதரகம் முயன்று வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பிரான்ஸ் சர்வாதிகார போக்கில் நடந்து கொள்வதாகவும் ரஷ்யா சாடியுள்ளது.
20 ஆண்டு சிறை: தீவிரவாதத்தை ஊக்குவிப்பது, போதை மருந்து கடத்தல், பண மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களை டெலிகார்ம தளம் மூலம் தடையின்றி அனுமதிக்காதது, பிரான்ஸ் நடத்திற்கு ஒத்துழைக்க மறுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பாவெல் துரோவ் மீது முன்வைக்கப்படுகிறது. இதில் அவருக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications