பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அறுத்துடுங்க" நாக்கை.. ரூ.10 கோடி தரேன்.. அயோத்தி மடாதிபதி பளீர்.. "ராமசரிதமானஸ்" சிக்கலில் அமைச்சர்

பீகார் கல்வித்துறை அமைச்சருக்கு எதிராக மடாதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநில கல்வித்துறை அமைச்சருக்கு எதிராக மடாதிபதிகள் சீறியுள்ளனர்.. அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சந்திரசேகரின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.10 கோடி வெகுமதி அளிப்பதாக அயோத்தி மடாதிபதி ஜகத்குரு பரமன்ஸ் ஆச்சார்யா அறிவித்துள்ளார்.

பீகார் உட்பட பல்வேறு வடமாநிலங்களில், மதரீதியான விவகாரங்கள் அவ்வப்போது தலைதூக்குவது வழக்கம்.. மாற்று கட்சியினர் ஒவ்வொரு முறையும் சர்ச்சை கருத்துக்களை சொன்னால், உடனடியாக பாஜக, கொந்தளித்து வந்துவிடும்..

கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துவிட்டு போகும். ஆனால் சில நாட்களுக்கு முன்பு, பாஜக எம்எல்ஏ ஒருவரே, லட்சுமி, சரஸ்வதி பற்றி பேசி, பல்வேறு தரப்பினரின் அதிருப்தியை சம்பாதித்திருந்தார்..

ஜாதிவாரி கணக்கெடுப்பு - பீகார் முதல்வர் நிதிஷ்குமார்தான் சமூக நீதி காவலர் என சீமான் பாராட்டு! ஜாதிவாரி கணக்கெடுப்பு - பீகார் முதல்வர் நிதிஷ்குமார்தான் சமூக நீதி காவலர் என சீமான் பாராட்டு!

 அறுபடும் நாக்கு

அறுபடும் நாக்கு

பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான் என்பவர், "லட்சுமி தேவியை வழிபட்டால் மட்டுமே செல்வம் கிடைக்கும் என்றால், முஸ்லிம்களும் கோடீஸ்வரர்களாக இருக்க மாட்டார்களா?.. முஸ்லீம்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை, ஆனால் அவர்கள் பணக்காரர்கள் ஆக இல்லையா? முஸ்லிம்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவதில்லை. அவர்களில் அறிஞர்கள் இல்லையா? முஸ்லிம்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகமாட்டார்களா? ஆன்மா மற்றும் கடவுள் விஷயம் எல்லாம் மக்களின் நம்பிக்கை மட்டுமே.

 லட்சுமிதேவி

லட்சுமிதேவி

ஆனால், தர்க்கரீதியான ஒன்றை அடைய, நாம் அறிவியல் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். நீங்கள் நம்புவதை நிறுத்தினால், உங்கள் அறிவுத்திறன் அதிகரிக்கும். நீங்கள் நம்புவதை நிறுத்தும் நாளில் இவை அனைத்தும் முடிந்துவிடும்" என்று லாலன் பாஸ்வான் கூறியிருந்தார்.. இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பிறகு எம்எல்ஏவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.. அந்த பாஜக எம்எல்ஏவின் உருவ பொம்மையையும் எரித்தனர்... இந்த பரபரப்பு முடிவதற்குள் இன்னொரு பரபரப்பு கிளம்பி உள்ளது. பீகார் மாநில கல்வித்துறை அமைச்சர் சந்திரசேகருக்கு எதிராக, மடாதிபதிகள் ஆவேசமாகி உள்ளனர்..

 பாம்பு கக்கும் விஷம்

பாம்பு கக்கும் விஷம்

ராமாயண கதையை விவரிக்கும் 'ராமசரிதமானஸ்' என்ற நூலைப் பற்றி சந்திரசேகர் அவதூறாகப் பேசியிதாக சர்ச்சை எழுந்துள்ளது... சில நாட்களுக்கு முன்பு, நாளந்தா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், 15வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.. இந்த விழாவில், அமைச்சர் சந்திரசேகர் பேசியபோது, "மனுஸ்மிருதி, ராமசரிதமானஸ், குரு கோல்வால்கரின் சிந்தனைகொத்து போன்ற நூல்கள் எல்லாமே வெறுப்பை பரப்புபவை... அன்புதான் நாட்டை சிறக்கச் செய்யுமே தவிர, வெறுப்பு கிடையாது.. அந்த மனுஸ்மிருதியில் பல பகுதிகள் இழிவுபடுத்தும் வகையில் உள்ளன.. ராமசரிதமாஸ் என்பது, தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களுக்கு கல்வி அளிக்கக் கூடாது, அவர்கள் பாலைக் குடித்துவிட்டு விஷத்தைக் கக்கும் பாம்புகள் போன்றவர்கள் என்கிறது" என்று சந்திரசேகர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

 டிஸ்மிஸ் எப்போது

டிஸ்மிஸ் எப்போது

இதற்குத்தான் இந்துமத ஆதரவாளர்களும், பாஜகவினரும் கொதித்துப்போய் உள்ளனர்.. அவரை உடனடியாகப் பதிவியிருந்து நீக்க வேண்டும் என மடாதிபதிகள் வலியுறுத்துகிறார்கள். சந்திரசேகரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் போர்க்கொடிகள் உயர்த்தப்பட்டு வருகின்றன.. இந்நிலையில், இதுகுறித்து அயோத்தி மடாதிபதி ஜகத்குரு பரமன்ஸ் ஆச்சார்யா இதை பற்றி சொல்லும்போது, "சந்திரசேகர் உடனடியாக அமைச்சர் பதவிலிருந்து நீக்கப்பட வேண்டும்...

 ரூ.10 கோடி

ரூ.10 கோடி

ராமசரிதமானஸ் பற்றி சந்திரசேகர் எப்படி குறை சொல்லலாம்? ராமசரிதமானஸ் வெறுப்பை தூண்டுபவை கிடையாது, அது மக்களை ஒருங்கிணைப்பது.. ராமசரிதமானஸ் மனிதநேயத்தை நிலைநிறுத்துவது... அது இந்திய கலாச்சாரத்தின் உருவமாக உள்ளது... நாட்டின் பெருமிதமாக விளங்குவது... இதுபோன்ற கருத்துகளை எல்லாம் இனியும் சகித்துக்கொள்ள முடியாது.. சந்திரசேகர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இது நடக்காவிட்டால், அவரது நாக்கை அறுப்பவருக்கு ரூ.10 கோடி சன்மானத்தை அறிவிக்கிறேன் என்று அதிரடியாக கூறியுள்ளார். இந்த சம்பவம் பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

English summary
₹ 10 crore reward and Ayodhya seer announces reward on Bihar Minister for his remarks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X