யாருப்பா அந்த காண்ட்ராக்டர்.. பீகாரில் சீட்டுக்கட்டுக்களை போல சரியும் பாலம்! இன்னைக்கு 15வது
பாட்னா: பீகாரில் ஆற்றுப் பாலங்கள் சீட்டுக்கட்டுகளை போல தொடர்ந்து சரிந்து வருகின்றன. இது குறித்து விவாதங்கள் மேலெழுந்துள்ள நிலையில், இன்று 15வது பாலம் சரிந்துள்ளது. இதனையடுத்து யாருப்பா அந்த காண்ட்ராக்டர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. ஓரிரு நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதேபோல குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலும் கனமழை காரணமாக விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்திருந்தது. இந்நிலையில் பீகாரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்று பாலங்கள் தொடர்ச்சியாக இடிந்து விழுந்துள்ளன.

கடந்த 4ம் தேதி பீகாரின் சிவான் மாவட்டம் கந்தகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தியோரியா தொகுதியில் அமைந்துள்ள இந்த சிறிய பாலம், பல கிராமங்களை மஹ்ராஜ்கஞ்ச் பகுதியுடன் இணைத்திருந்தது. இது பீகாரில் கடந்த 15 நாள்களில் நிகழ்ந்த 7வது சம்பவமாகும். இதனை தொடர்ந்து 8வது சம்பவமாக அதே நாளில் சாப்ர மாவட்டத்தில் உள்ள மற்றொரு சிறு பாலம் இடிந்து விழுந்திருந்தது.
பாபா தோத்நாத் கோயில் அருகே உள்ள ஆற்றின் மேல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஜூலை 3ம் தேதி இடிந்து விழுந்தது. மொத்தமாக கடந்த 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்திருந்தன. இதனால் நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பாலங்கள் இடிந்து விழுந்த இடங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
இப்டியாக சலசலப்புகள் எழுந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் பாலங்கள் சரிந்து விழ தொடங்கியுள்ளன. அராரியா மாவட்டத்தின் ஃபோர்பேஸ்கஞ்ச் தொகுதியில் உள்ள அம்ஹாரா கிராமத்தில் பர்மன் ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலம் கடந்த 16ம் தேதி இடிந்து விழுந்திருக்கிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,
"16ம் தேதி இடிந்து விழுந்த பாலம் கடந்த 2008-2009 காலத்தில் கட்டப்பட்டது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு பிறகு அதாவது 2017ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த பாலம் சேதமடைந்தது. எனவே நாங்கள் பாலத்தை மூடினோம். பாலத்தின் வழியாக இருந்த போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 2021-2022ல் பாலத்தில் பாழுதுபார்ப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது இடிந்து விழுந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே பாலம் சரிந்த விவகாரத்தில் 15 பொறியாளர்களை பீகார் அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், அடுத்தடுத்து பாலங்கள் சரிந்த விழுந்திருப்பது பெரும் விவாதமாக வெடித்திருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications