பறவையால் அந்தரத்தில் தவித்த 175 பயணிகள்.. டெல்லி இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப பிரச்சனை.. ஷாக்
பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து இன்று காலையில் டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்படும்போதே அதன்மீது பறவை மோதியது. இதனால் விமான இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில் விமானத்தில் பயணித்த 175 பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிகள் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு விமான சேவைகள் உள்ளன. இந்நிலையில் தான் இன்று காலையில் பாட்னாவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது.

இந்த விமானத்தில் மொத்தம் 175 பயணிகள் இருந்தனர். இதுதவிர பைலட்டுகள், விமான பணியாளர்களும் விமானத்தில் இருந்தனர். இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேய திடீரென்று இன்ஜினில் பிரச்சனை ஏற்பட்டது.
விமானத்தின் ஒரு இன்ஜினில் இருந்து பலமான அதிர்வுகள் ஏற்பட்டது. இதையடுத்து உடனே சுதாரித்த விமானிகள் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவித்து அவசர அவசரமாக விமானத்தை திருப்பி மீண்டும் பாட்னா விமான நிலையத்தில் தரையிறக்கினர். விமானத்தில் இருந்த 175 பயணிகள், விமான பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் விமானம் ஓடுபாதையில் இருந்து மேலேழும்பி புறப்பட்டபோது அதன் மீது பறவை மோதியதும், அதன்பிறகு இன்ஜினில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டதும் தெரியவந்தது. இதுபற்றி பாட்னா விமான நிலையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‛‛IG05009 பாட்னா - டெல்லி விமானம் இன்று காலை 8.42 மணிக்கு பாட்னாவில் இருந்து புறப்பட்டது. அப்போது விமானத்தின் மீது பறவை மோதியது. விமான நிலையத்தின் ஓடுதளத்தை ஆய்வு செய்தபோது இறந்த பறவை மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் விமானத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே விமானத்தின் இன்ஜினில் அதிர்வும் ஏற்பட்டது. இதையடுத்து விமானம் பாட்னாவிற்கு மீண்டும் வந்தது. ஓடுபாதை 7 ல் காலை 09.03 மணிக்கு மீண்டும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications