Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 வயது சிறுமி முதல் 80 வயது பாட்டி வரை பலாத்காரம்- மைனர் சிறுவர்களுக்கு பலியாகும் பெண்கள்

பீகாரில் 80 வயது பாட்டியை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

பாட்னா: இளம் பிஞ்சுகள் முதல் வயது முதிர்ந்த பாட்டிகள் வரை இன்றைக்கு பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். பீகாரில் 80 வயது பாட்டியும், மத்திய பிரதேசத்தில் 4 வயது குழந்தையை கூட சாக்லேட்டை வாயில் திணித்து சீரழித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் மாதுபானியை அடுத்த ஜமாலியா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பாட்டி இரு தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பாட்டியின் உறவுக்கார சிறுவன் வீட்டிற்கு வந்திருக்கிறான். பாட்டியை பார்த்த உடன் வாயில் துணியை வைத்து அடைத்தான். மூச்சுத்திணறிய பாட்டி துடிக்க ஆரம்பித்தார்.

80 year old woman and 4 year baby molested by minor boy

வயதான பாட்டி என்றும் பார்க்காமல் பலாத்காரம் செய்தான் அந்த சிறுவன். பாட்டியின் அழுகைக் குரல் கேட்ட உடன் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாட்டியை மீட்டனர். சிறுவனை அடித்து தர்மஅடி கொடுத்தனர். போலீசில் புகார் கொடுத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

15 வயது சிறுவன் 80 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல மத்திய பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் 4 வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து பலாத்காரம் செய்துள்ளான். வியாழக்கிழமையன்று இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தாயார் மகளை வீட்டில் தனியாக விட்டு விட்டு வெளியே சென்றிருந்தார். பக்கத்து வீட்டுக்காரர்களை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வேலைக்கு போயிருந்த நேரத்தில் சிறுவன் ஒருவன் வீட்டிற்குள் வந்தான். சிறுமியுடன் விளையாடத்தான் அவன் வீட்டிற்குள் செல்வதாக அக்கம் பக்கத்தினர் நினைத்தனர். ஆனால் அந்த கொடூரன், சிறுமியின் வாயில் சாக்லேட்டை திணித்து பலாத்காரம் செய்துள்ளான்.

மதியம் வீட்டிற்குள் வந்து பார்த்த சிறுமியின் அம்மாவிற்கு சந்தேகம் எழுந்தது. காரணம் சிறுமி சோர்வாக படுத்திருந்தாள். 2 மணியளவில் மருத்துவரிடம் அழைத்துச்சென்ற போது சிறுமியின் உள் உறுப்புகள் பலத்த காயமடைந்திருந்தன. இதனையடுத்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியின் தாயாரும் உறவினர்களும் அளித்த புகாரின் பேரில் மைனர் சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் குழந்தையை சீரழித்த சிறுவனுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+