இந்தியாவில் காங்கிரஸ் - ஆர்எஸ்எஸ்/பாஜக இடையே கொள்கை யுத்தம்- பாட்னாவில் ராகுல் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: இந்தியாவில் நடப்பது கொள்கை யுத்தம்; பீகாரில் காங்கிரஸ் மரபணு உள்ளது என பாட்னாவில் காங்கிரஸ் கட்சியினரிடையே பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

பாட்னாவில் காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஒருங்கிணைத்துள்ளார்.

 A war of ideology going on in India: Rahul Gandhi in Patna

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பாட்னா வருகை தந்தனர். பாட்னாவில் ராகுல், கார்கேவுக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பலித்தனர்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் நாம் நடத்துவது கொள்கை யுத்தம். ஒருபக்கம் காங்கிரஸ் இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ், பாஜக. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பீகாரில் காங்கிரஸில் மரபணு உள்ளது. நாம் ஒருங்கிணைந்து நின்றால் வெல்வது உறுதி என்றார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டும்; பீகாரில் நாம் வென்றாலேயே ஒட்டுமொத்த இந்தியாவிலும் வெல்வதாக அர்த்தம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+