Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையைவிட மோசம்.. பீகார் தர்பங்கா எய்ம்ஸ் மருத்துவமனை கதை தெரியுமா? 8 வருசமா இடம் கூட இல்லையாம்

பீகாரில் 2 வது எய்ம்ஸ் மருத்துவமனை தர்பங்காவில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டு 8 ஆண்டுகளாகியும் அதற்கான இடம் கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் ஏற்கனவே மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ள நிலையில் 2 வது எய்ம்ஸ் மருத்துவமனை தர்பங்காவில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டு 8 ஆண்டுகளாகியும் அதற்கான இடம் கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதே நேரம் நிர்வாக இயக்குநர் ஒருவரை மத்திய அரசு நியமித்து இருக்கிறது.

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில், அந்த மாநிலத்தின் தர்பங்காவில் மேலும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

கடந்த 2015 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த அவர், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார்.

புதிய எய்ம்ஸ்

புதிய எய்ம்ஸ்

அத்துடன் பீகாரின் மருத்துவ சேவைகளை கருத்தில் கொண்டு அந்த மாநிலத்தில் மேலும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று தெரிவித்தார். பீகாரின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையே அடிக்கல் நாட்டி 8 ஆண்டுகளுக்கு பிறகே திறப்பு விழா கண்டது. 1.9 லட்சம் மருத்துவர்களை மட்டுமே கொண்ட பீகாருக்கு 2 வது எய்ம்ஸ் மருத்துவமனை வரப்போகிறது என்ற தகவல் வேகமாக பரவியது.

2015 பீகார் தேர்தல்

2015 பீகார் தேர்தல்

2015 ஆம் ஆண்டில் பீகாரில் தேர்தல் நடைபெற இருப்பதால் அதை முன்னிட்டு இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த எய்ம்ஸ் மருத்துவமனையை சொல்லியே பாஜகவினர் அங்கு வாக்கு சேகரித்தனர். இந்த அறிவிப்பு வெளியான 3 மாதம் கழித்து தர்பாங்கா எய்ம்ஸுக்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

200 ஏக்கர் நிலம்

200 ஏக்கர் நிலம்

200 ஏக்கர்களை கொண்ட 3 அல்லது 4 நிலங்களை தேர்வு செய்யுமாறும், அதற்கு அருகே 4 வழிச்சாலை வசதி, ஒரு மாதத்திற்குள், மின்சாரம், தண்ணீர் இணைப்பு வசதி போன்றவை ஏற்படுத்தும் வகையில் அந்த இடம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், பீகார் அரசோ இடத்தை தேர்வு செய்யாமலேயே காலம் தாழ்த்தியது.

 காலம் தாழ்த்திய பீகார் அரசு

காலம் தாழ்த்திய பீகார் அரசு

டிசம்பர் 2015 மற்றும் மே 2016 ல் 2 முறை மத்திய அரசு நினைவூட்டியும் பதில் கிடைக்கவில்லை. ஆனால், ஆகஸ்டு மாதம் பதிலளித்த பீகார் அரசு, மத்திய அரசே இடத்தை தேர்வு செய்துகொள்ளுமாறு தெரிவித்தது. ஆனால், இதை தேர்வு செய்யும் பொறுப்பு மாநில அரசுடையது என மத்திய அரசு அறிவுறுத்தியது.

எச்சரித்த மத்திய அரசு

எச்சரித்த மத்திய அரசு

இதற்கு பதிலளிக்க மேலும் 3 மாதங்கள் காலம் தாழ்த்திய பீகார் அரசு, மீண்டும் அதே பதிலையே அளிக்க, மத்திய அரசு மீண்டும் அதே விளக்கத்தையே கொடுத்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு அனுப்பிய எச்சரிக்கையில், 15 நாட்களுக்கு பதிலளிக்காவிட்டால் இந்த திட்டம் கைவிடப்படும் என்றது.

இடம் தேர்வு

இடம் தேர்வு

இதனை தொடர்ந்து தார்பாங்காவில் இடத்தை தேர்வு செய்துகொடுத்தது பீகார் அரசு. அங்குள்ள மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான 227 ஏக்கர் நிலத்தை கொடுப்பதாக அறிவித்தது. இதற்கான இறுதி ஆணை கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால், அந்த மருத்துவக் கல்லூரி கட்டிடம் பாரம்பரிய கட்டிடம் என்பதால் அங்கு எய்ம்ஸ் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.

நிதி மதிப்பீடு

நிதி மதிப்பீடு

இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவுக்கு மாற்றாக ஹர்ஷவர்த்தன் நியமிக்கப்பட்டார். கொரோனாவும் பரவத் தொடங்கியது. இதனால் பணிகள் தாமதமாகின. இறுதியாக ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் கட்ட மதிப்பிடப்பட்டு 48 மாதங்களில் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டப்பட்டது. ஆனால், தற்போது 2022 நில ஒதுக்கீடு தொடர்பாக பிரச்சனைகள் தொடர்ந்துகொண்டே இருந்தன.

சிக்கலான நிலம்

சிக்கலான நிலம்

ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தின் ஆவணங்களும் முறையற்றதாக இருந்ததால் அங்கு பணிகளை தொடங்குவதில் சிக்கல் இருந்தது. இதுவரை நிலம் ஒதுக்கீடு பிரச்சனைகள் ஓயாத நிலையில் புதிய நிலத்தை தேடி வருகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு இடமோ, கட்டிடமோ, மருத்துவரோ, மாணவரோ இல்லை.

மதுரையே பரவாயில்லை

மதுரையே பரவாயில்லை

இந்த நிலையில் நிலையில் அதன் நிர்வாக இயக்குநராக மருத்துவர் மதபானந்தா கரை மட்டும் நியமித்து இருக்கிறார்கள். இதை ஒப்பிடுகையில் மதுரைக்கு நிலமாவது இருக்கிறதே என்று தேற்றிக்கொள்ளலாம். இவ்வளவு பிரச்சனைகளும் நடந்தபோது பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 2022 வரை வரை பாஜகவுடன் கூட்டணி அமைத்தே ஆட்சி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+