கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய ஹெலிகாப்டர்.. அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பினார் அமித்ஷா
பாட்னா: பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணம் செய்த ஹெலிகாப்டர் டேக் ஆப் ஆகும் போது கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது. வானில் பறக்க முயன்ற போது லேசாக தடுமாறிய ஹெலிகாப்டர் பிறகு சீராக பறந்து சென்றது. இதனால் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பினார் அமித்ஷா.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. 3 ஆம் கட்ட தேர்தல் வரும் மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். பீகாரில் 5 தொகுதிகளுக்கு 3-ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் வாக்கு சேகரிப்புக்காக தீவிர பிரசாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அந்த வகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், இன்று பிக்காரின் பெகுசராய் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று பேசினார்.
பிரசாரம் பொதுக்கூட்டம் முடிந்த பிறகு அமித்ஷா, தான் வந்து இருந்த ஹெலிகாப்டரில் புறப்பட தயாரானர். அமித்ஷா ஏறியதும் ஹெலிகாப்டர் டேக் ஆப் ஆக தயாரானது. அப்பொது, திடீரென அங்கு பலத்த காற்று வீசியதால் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் டேக் ஆப் ஆக முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து ஒருபக்கமாக பறந்தது.
சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்து டேக் ஆப் ஆக முடியாமல் அமித்ஷா ஹெலிகாப்டர் தடுமாறியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில வினாடிகளில் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் வந்த ஹெலிகாப்டர் பறந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக எதுவும் அசம்பாவிதம் ஏற்படாததால் விபத்து எதுவும் சிக்காமல் அமித்ஷா உயிர் தப்பினார்.
பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கை கோர்த்துள்ள பாஜக, 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும் சிராக் பாஸ்வானின் எல்ஜேபி மற்றும் ஜித்தம்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா மற்றும் பிற கூட்டணி கட்சிகள் இதர இடங்களில் போட்டியிடுகின்றன.












Click it and Unblock the Notifications