பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ம்ம்! வேலையை உடனே ஆரம்பியுங்கள்.. 2024க்கும் மோடிதான் பிரதமர் வேட்பாளர்! பிளானை போட்டுடைத்த அமித் ஷா

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அமித் ஷா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும் உள் துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாட்கள் பயணமாகப் பீகார் மாநிலத்திற்குச் சென்று உள்ளார்.

அங்கு அமித் ஷா பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இதனிடையே பாட்னாவில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டுத் தேசிய செயற்குழு கூட்டத்தின் நிறைவு அமர்வில் அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெற்றது.

எங்கும் வட இந்தியர்.. பொங்கும் கே.எஸ்.அழகிரி! “மோடி மட்டும் அப்டி பேசலாமா? போராட்டம் நடத்தப்போறோம்” எங்கும் வட இந்தியர்.. பொங்கும் கே.எஸ்.அழகிரி! “மோடி மட்டும் அப்டி பேசலாமா? போராட்டம் நடத்தப்போறோம்”

 அமித் ஷா

அமித் ஷா

தலித்துகள், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர் என நலிவடைந்த பிரிவினரை முன்னேற்றப் பிரமதர் மோடி மோடி முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பாக பூத் அளவில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அமைச்சர் அமித் ஷா பாஜக தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார். அமித் ஷா அந்தக் கூட்டத்தில் என்ன பேசினார் என்பது குறித்த தகவல்களை பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டார்.

 2024க்கு தயாராக வேண்டும்

2024க்கு தயாராக வேண்டும்

அருண் சிங் கூறுகையில், "நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், வரும் ஆகஸ்ட் 9 முதல் 12 வரை நான்கு நாட்கள் பாஜக தொண்டர்கள் பொதுமக்களிடம் தேசபக்தி உணர்வுகளைப் பரப்ப வேண்டும் என அமித் ஷா கேட்டுக் கொண்டார். 2024 தேர்தலுக்கும் தயாராக வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரத் தேவையான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என அவர் தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.

 மோடி தான் பிரதமர் வேட்பாளர்

மோடி தான் பிரதமர் வேட்பாளர்

பீகாரில் 2024 லோக்சபா மற்றும் 2025 சட்டசபைத் தேர்தல்களில் பாஜகவும் ஜேடியு கட்சியும் இணைந்து போட்டியிடும். இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம். 2024 தேர்தலைப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தான் எதிர்கொள்வோம். அவர் மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார். 2024 மற்றும் 2025 இல் பீகாரில் ஒன்றாகத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளோம் என அமித் ஷா தெரிவித்தார்.

 பிரதிநிதித்துவம்

பிரதிநிதித்துவம்

அதிலும் கடந்த முறை இருந்ததை விட அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு தொண்டர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தலித்துகள், பழங்குடியினர், ஓபிசி பிரிவினருக்கு அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து உள்ளது. இந்தப் பிரிவினருக்கு அமைச்சரவையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகபட்ச பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. கிராமங்களில் இருந்து வந்தவர்களுக்கும் அதிக இடம் வழங்கப்பட்டு உள்ளதாக அமித் ஷா குறிப்பிட்டார்.

 நன்றி சொல்ல வேண்டும்

நன்றி சொல்ல வேண்டும்

பிரதமர் மோடியால் தான் உரிமை மறுக்கப்படுபவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவம் படுத்த வேண்டும் என்பதே மோடியின் நோக்கம். பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண் நாட்டின் உட்சபட்ச பதவிக்குச் சென்றுள்ளார். இதற்கெல்லாம் நாம் பிரதமர் மோடிக்கு நன்றி கூற வேண்டும் என அமித் ஷா பேசினார்" என்றார்.

English summary
Lok Sabha election under PM Narendra Modi leadership says Amit Shah: (2024 லோக்சபா தேர்தல் குறித்து அமித் ஷா) BJP plans for 2024 lok sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X