அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்புக்கு எதிர்ப்பு- போர்க்களமான பீகார்! ரயில்கள் மீது தாக்குதல்- தீ வைப்பு!
பாட்னா: மத்திய அரசின் ராணுவத்துக்கு புதியதாக ஆட்சேர்க்கும் திட்டமான அக்னிபாத் அல்லது அக்னிபாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, பீகார் மற்றும் ராஜஸ்தானில் இளைஞர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பீகாரில் பெருந்திரளான இளைஞர்கள் சாலைகளில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
Recommended Video
மத்திய அரசின் புதிய ராணுவ ஆட்சேர்பு கொள்கை அக்னிபாத் திட்டம் நேற்று முன் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ராணுவத்துக்கு தேர்ந்தெடுக்கப்பவருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கப்படும். 4 ஆண்டுகள் பணிக்கு பின்னர் 80% பேர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவர். மேலும் 4 ஆண்டுகளுக்குப் பின் 20% மட்டும் பேர் ராணுவப் பணியை தொடர முடியும். இந்த அக்னிபாத் திட்டம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் ராணுவ செலவு குறையும். நாட்டின் பாதுகாப்பு படைகளின் செலவின குறைப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அக்னிபாத் ஊதியம்
அக்னிபாத் வீரர்களுக்கு, அபாயம் மற்றும் சிரமப்படிகளுடன் ஈர்க்கும் வகையிலான மாதாந்திர ஊதியம் வழங்கப்படும். 4 ஆண்டு பணிக்காலம் முடிவடைந்ததும் அக்னி வீரர்களுக்கு சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். அதில் அவர்களது பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவை அடங்கும். முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ,30,000 நிர்ணயிக்கப்படும். அக்னி வீரர் தொகுப்பு நிதிக்கு ரூ.9,000 அளிக்கப்படும். எஞ்சிய ரூ.21,000 கையில் கிடைக்கும்.

4 ஆண்டுகள் பணி
2-ம் ஆண்டில் ரூ.33,000, 3-ம் ஆண்டில் ரூ.36,500, 4-ம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30% பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70% தொகை வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சேர்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் வீரர்களுக்கு வழங்கப்படும். இந்த சேவா நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது. அக்னி வீரர்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு ரூ.48 லட்சத்துக்கு வழங்கப்படும். அக்னிபத் திட்டத்தின்கீழ், 4 ஆண்டு காலத்திற்கு வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

போராட்டம் வெடித்தது
இத்திட்டத்தின் சாதக, பாதக அம்சங்கள் தொடர்பாக நாடு முழுவதும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பீகார், உ.பி.யில் நேற்று ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள், மத்திய அரசின் திட்டத்துக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

போர்க்களமான பீகார்
இந்த நிலையில் இன்றும் பீகாரில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. பீகாரின் நாவடா பகுதியில் சாலையில் திரண்ட ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் டயர்களை எரித்து போராட்டம் நடத்தினர். பீகாரின் Bhabhua Road ரயில் நிலையத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் ரயில் தண்டவாளங்களில் டயர்களை எரித்து போட்டனர். இதில் ரயில் பெட்டி ஒன்று தீப்பிடித்து எரிந்தது. Arrah ரயில் நிலையத்தில் போராடிய இளைஞர்களை கலைந்து செல்ல கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு எதிராக போலீசார் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. Jehanabad-ல் போலீசாரும் போராடிய இளைஞர்களும் சரமாரியாக கற்களை வீசிக் கொண்டனர். இதேபோல் பீகாரின் பல இடங்கள் போர்க்களமாக காட்சி தருகின்றன.

காஷ்மீர் தமிழகம்
இதேபோல தமிழகத்தின் வேலூர், ராஜஸ்தானிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரிலும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் நடைபெறுகிறது. ராணுவத்தில் சேருவோருக்கான பணி பாதுகாப்பு, ஓய்வூதியம் உள்ளிட்டவை அக்னிபாத் திட்டத்தால் பாதிக்கப்படுவதாக கூறி இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
-
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய்












Click it and Unblock the Notifications